clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

எண்கணிதப்படி சிவகாசி பெயரை மாற்றக் கோரி நகராட்சி தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22, 2009, 13:45[IST]
Sivakasi
Vote this article
Up  
Down  


சிவகாசி: சிவகாசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கவும், நகரின் பொது நன்மைக்காகவும், ஆங்கிலத்தில் Sivakasi என எழுதப்படும் பெயரை Sivakaasi என கூடுதலாக ஒரு ஏ சேர்க்க வேண்டும் என்று கோரி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுவது சிவகாசி. பட்டாசு, தீப்பெட்டித் தொழில், அச்சுத் தொழில் ஆகியவற்றில் முன்னணியில் உள்ள குட்டி நகரம் சிவகாசி. சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவில் சிவகாசியில் மட்டும் 540க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன.

குடிசைத் தொழிலாக இருந்தாலும், ஆண்டுக்கு ரூ.500 முதல் 800 கோடி வரை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்றமதியும் நடக்கிறது. ஒன்றரை முதல் இரண்டரை லட்சம் வரையிலான மக்கள் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை பெற்றுவருகின்றனர்.

இத்தகைய ஆக்கப்பூர்வமான திறன் கொண்ட தொழில் நகரத்தின் நிர்வாகத்தினர், 'நியுமராலஜி' மீது கவனத்தை செலுத்தியுள்ளனர். சிவகாசியை ஆங்கிலத்தில் குறிப்பிடும் போது, அப்பெயரில் கூடுதலாக ஒரு, 'a' என்ற எழுத்தை சேர்த்து 'sivakaasi' என மாற்றியமைத்தால், நகரத்திற்கு நன்மை ஏற்படும் என கண்டுபிடித்துள்ளனர்.

கூடுதலாக ஒரு எழுத்தை சேர்த்து ஒலிப்பதால் ஏற்படும் அதிர்வு நல்ல பலனை தருவதோடு, மாற்றியமைக்கப்பட்ட பெயரின் கூட்டு எழுத்து 9 என்பதால் கூடுதல் அதிர்ஷ்டம் என்கிறார் சிவகாசி நகராட்சியின் துணைத் தலைவர் அசோகன்.

இதை தனிப்பட்ட கருத்தாக மட்டும் சொல்லாமல், நகராட்சியின் தீர்மானமாகவே நிறைவேற்றி உள்ளார்கள். மொத்தம் 33 பேர் உள்ள நகரமன்றத்தில் ஒன்பது தி.மு.க.வினர் உட்பட 32 பேர் இந்த பெயர் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் அளித்தால் அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றப்படும் என்று சிவகாசி நகராட்சி கமிஷனர் விஜயராகவன் தெரிவித்தார்.

பகுத்தறிவில் நம்பிக்கைக் கொண்ட திமுக அரசு இந்த தீர்மானத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்று தெரியவில்லை.

ஆனால் நம்மூர் அரசியல்வாதிகள் பலரும் எண் கணிதத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா, தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகர்கள் ராஜ்குமார், ராகேஷ் ரோஷன் உள்ளிட்டோரும் இதே போன்று 'a' என்ற எழுத்தை தங்கள் பெயரில் கூடுதலாக சேர்த்துள்ளது அனைவரும் அறிந்ததே.

சினிமாவில் மூட நம்பிக்கை குறித்து வாய் வலிக்க வலிக்கப் பிரசாரம் செய்து வரும் நடிகர் விவேக் கூட தனது பெயரில் ஒரு 'எச்' எழுத்தை சேர்த்து வைத்துள்ளார் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: சிவகாசிக்காரன்
பதிவு செய்தது: 23 Nov 2009 11:12 am
டேய், சிவகாசி பெயர கேடுக்காதீங்கடா... மக்களே... ரொம்ப சம்பாதிச்சிட்டு பொழுது போகாத ஆளுக ஐடியா இது... உண்மையில உழைப்பாளிகள் அவங்க வொர்க்க பாக்குறாங்க ரெகுலரா.. கடவுளே எங்கள காப்பாத்து...

பதிவு செய்தவர்: இயற்கையை சீரழிக்கும் பட்டாசு
பதிவு செய்தது: 23 Nov 2009 9:49 am
இயற்கையை சீரழிக்கும் ஒரு தொழிலை ( பட்டாசு ) செய்துகொண்டு , அதற்கு நியுமராலஜி என்று காரணம் கூறும் மக்களை என்ன என்று சொல்ல ... சிங்கப்பூர் , ஆஸ்திரேலியா , இங்கு எல்லாம் பட்டாசு வெடிக்க கூடாது என்று சட்டமே இருக்குறது. இது தான் அவர்கல்லுகும் எங்கள்ளுகும் உள்ள பரிணாம வளர்ச்சி.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!