சென்னை: சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த விமானத்தில் ஏற்றப்படவிருந்த சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் சரக்கு விமானத்தில் அனுப்பி வைப்பதற்காக ஒரு சொகுசு கார், சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென அந்தக் கார் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அந்தக் காரில் பற்றிய தீயை அணைத்தனர்.
இருப்பினும் தீயில் சிக்கிய கார் பெருமளவில் சேதமடைந்து விட்டது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.