சென்னை: சென்னைத் தொலைக்காட்சியின் முதல் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய கருப்பசாமி காலமானார். அவருக்கு வயது 70.
1966ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற அவர், தனது செய்தி ஆர்வம் காரணமாக பின்னர் இந்திய தகவல் பணியில் சேர்ந்தார்.
டெல்லி அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவில் செய்தி ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
அதன் பிறகு சென்னை வானொலியில் பணியாற்றிய அவர், சென்னையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் முதல் செய்தி ஆசிரியராக பணியாற்றினார்.
2000ம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
மறைந்த கருப்பசாமிக்கு மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.