clear
clear
clear
x

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் உற்சாகக் கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 25, 2009, 9:36[IST]
Vote this article
Up  
Down  


சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இன்று கிறிஸ்துமஸ். இயேசுநாதர் அவதரித்த இந்த நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துவ மக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் வழக்கமான உற்சாகம், குதூகலதத்துடன் கொண்டாடப்படுகிறது.

நேற்று நள்ளிரவில் மாநிலம் முழுவதும் உள்ள சர்ச்சுகளில் நள்ளிரவு விசேஷ பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தன. இதில் கிறிஸ்துவ மக்கள் குடும்பத்துடன், புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

இன்று காலை அனைத்துப் பேராலயங்களிலும் சிறப்பு கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகள் நடந்தன.

இதேபோல நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

சென்னை சாந்தோமில் உள்ள சர்ச், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்டவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்புப் பிரார்த்தனைகளில் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிமிருந்து வந்த கிறிஸ்தவர்கள் வழிபட்டனர்.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

Book Your Flight Tickets on Oneindia.in
படிக்கவில்லையா?
தற்போதைய செய்திகள்
Tapasee தபசி
Pacchai Enginra Kaathu பச்சை என்கின்ற காத்து
Gokulam கோகுலம்