clear
clear
clear
x

வாஜ்பாய் 86வது பிறந்த நாள்- பிரதமர், முதல்வர் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 25, 2009, 16:30[IST]
Vajpayee
Vote this article
Up  
Down  


டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் 86வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனற்.

கிறிஸ்துமஸ் தினமான இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும் பிறந்த நாளாகும். இன்று அவர் தனது 86வது பிறந்த நாளை அமைதியான முறையில் கொண்டாடினார்.

இதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் இன்று வாஜ்பாய் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியும் வாஜ்பாயை நேரில் சென்று வாழ்த்தினார்.

பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரும் வாஜ்பாயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கர்நாடக முதல்வர் எதியூரப்பா உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்களும் வாஜ்பாயை நேரில் சந்தித்து வாழ்த்தினற்.

கடந்த சில ஆண்டுகளாக வாஜ்பாய் உடல் நலம் குன்றிய நிலையில் தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார்.

கருணாநிதி வாழ்த்து..

முதல்வர் கருணாநிதி வாஜ்பாய்க்கு வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பியிருந்ததாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

Book Your Flight Tickets on Oneindia.in
படிக்கவில்லையா?
தற்போதைய செய்திகள்
Tapasee தபசி
Pacchai Enginra Kaathu பச்சை என்கின்ற காத்து
Gokulam கோகுலம்