நாகர்கோவில்: சுனாமி பேரலைகளில் சி்க்கி பலியானவர்களுக்கு நாளை 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரலை தாக்கி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பெரும் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது.
ஆழிப்பேரலையின் கோரதாண்டவத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 800க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இதன் 5ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி, குளச்சல், கொட்டில்பாடு, மணக்காடு, உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கொட்டில்பாடு கிராமத்தில் மட்டும் குழந்தைகள் உள்பட 199 பேர் பலியானார்கள்.
இவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்துகின்றனர். நினைவு திருப்பலியும் நடக்கிறது.
கன்னியாகுமரி கடற்கரையில் சுனாமி நினைவு பூங்கா ஸ்தூபியில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்துக்கின்றனர்.
நாகப்பட்டினத்தில் நடக்கும் சுனாமி நினைவு தின நிகழ்ச்சியில் எம்.பி கனிமொழி பங்கேற்று, மலரஞ்சலி செலுத்துகிறார்.
நாகப்பட்டினம், வேளாங்கன்ண்ணி, கீச்சாங்குளம், அக்கரைபேட்டை, கோடியக்கரை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் பெருமளவிலான மக்கள் சுனாமிக்குப பலியானார்கள்.
சென்னையிலும் சுனாமிக்குப் பலர் பலியானார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக கடலோரக் கிராமங்களில் நாளை பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள், அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாளை சுனாமி பாதிக்கப்பட்ட கடலோர கிராம மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் நினைவு தினத்தை அனுஷ்டிக்கவுள்ளனர்.
மேலும் தொடர்பான செய்திகள்:
தொடர்பான செய்திகள்