டெல்லி: ஒரே நாள் இரவில் தெலுங்கானா மாநிலத்தை அமைத்து விட முடியாது. இதை சந்திரசேகர ராவ் புரிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. மத்திய அரசின் இந்த முடிவில் மாற்றம் இல்லை. மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இட மில்லை. இது குறித்து அனைத்து அம்சங்களையும் ஆராய்வோம்.
ஒரே இரவில் தெலுங்கானாவை உருவாக்கி விட முடியாது இதை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மேலும் தொடர்பான செய்திகள்:
தெலுங்கானா
மாநிலம்
அமைப்பு
தொடர்பான செய்திகள்