clear
clear
clear
x

எம்எல்ஏக்களின் மாத சம்பளம் உயர்கிறது

வெள்ளிக்கிழமை, ஜனவரி 8, 2010, 17:42[IST]
Vote this article
Up  
Down  


சென்னை: தமிழக எம்எல்ஏக்களின் சம்பளம் ரூ.3,000ல் இருந்து ரூ. 8,000 ஆகவும், வாகனப்படி ரூ.5,000ல் இருந்து ரூ. 20,000 ஆகவும் உயருகிறது.

தமிழக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி சார்பில் நிதியமைச்சர் அன்பழகன் சம்பளங்கள் வழங்கல் (திருத்த) சட்ட முன் வடிவை இன்று தாக்கல் செய்தார்.

இதன்படி, சட்டசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் சம்பளம் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்படும். எம்எல்ஏக்களின் வாகன படி மாதத்திற்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகிறது.

உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. முன்னாள் உறுப்பினர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு சமச்சீரான வீதத்தில் குடும்ப ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் என உயர்த்தப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் மறைந்த உறுப்பினர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கட்டணமின்றி இலவசமாக தங்குவதற்கான வசதிகளுடன் மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளலாம்.

மேலே சொன்ன சம்பளம், படி உயர்வு 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

Book Your Flight Tickets on Oneindia.in
படிக்கவில்லையா?
தற்போதைய செய்திகள்
Tapasee தபசி
Pacchai Enginra Kaathu பச்சை என்கின்ற காத்து
Gokulam கோகுலம்