clear
clear
clear
x

மனைவி பிரிவு தாங்காமல் கணவன் தற்கொலை

புதன்கிழமை, பிப்ரவரி 10, 2010, 9:29[IST]
Vote this article
Up  
Down  


நெல்லை: புதுமனைவியை பிரிந்து வாழ்ந்ததால் மனமுடைந்த கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லையை அடுத்த தாழையுத்து ரயில் நிலையத்தின் தென்புறம் நேற்று முன்தினம் காலை ரயிலில் அடிபட்ட நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது. அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் மற்றும் தலை சிதைந்து காணப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பலியானவர் சிங்கை மேற்கு முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துமாரி மகேஷ் என விசாரணையில் தெரிந்தது.

இவர் பொறியியல் படிப்பு முடித்துள்ளார். இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. மனைவி சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனவேதனை காரணமாக அவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

Book Your Flight Tickets on Oneindia.in
படிக்கவில்லையா?
தற்போதைய செய்திகள்
Tapasee தபசி
Pacchai Enginra Kaathu பச்சை என்கின்ற காத்து
Gokulam கோகுலம்