வாடிக்கையர் சேவையில் முந்தைய தலைமுறைக்கும் பின்னே உள்ள பிஎஸ்என்எல்சென்னை: இன்று முதல் சென்னை மற்றும் தமிழகத்தில் 3 ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல். சென்னை அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வைத்து விழா நடத்தி அறிமுகப் படலத்தை முடித்துவிட்டார்கள் அதிகாரிகள். அவரவர் கேக் - ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு அத்தோடு மறந்துவிட்டார்கள் விஷயத்தை.சரி... பிஎஸ்என்எல் 3 ஜி சேவை மக்களைச்
பன்னாட்டு நிறுவனங்களில் அதிகரித்துவிட்ட மோசடி!பெங்களூர்: சர்வதேச பொருளாதார மந்தம் காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் பன்னாட்டு நிறுவனங்களில் மோசடிகள் அதிகரித்துவிட்டதாக பிரபல சர்வதேச தணிக்கை நிறுவனம் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் தெரிவித்துள்ளது.இதற்காகவே பிரத்தியேகமாக இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளன. பொருளாதார வீழ்ச்சி காரணமாக நிறுவனங்களின் கணக்குகளில் உள்ள நேர்மைத் தன்மை குறித்து அறிய 54 நாடுகளில் உள்ள பிரபல..
3 ஜி சேவை... நாளை முதல் தமிழகத்தில்!சென்னையில் நாளை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 ஜி மொபைல் சேவை அறிமுகமாகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வீடியோ கான்பரன்ஸிங் உள்ள பல நவீன வசதிகளை அளிக்கும் அடுத்த தலைமுறைக்கான மொபைல் சேவையை கடந்த பிப்ரவரி மாதமே அறிமுகப்படுத்தியது பிஎஸ்என்எல்.ஆனால் இந்த திட்டம் வட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது..
சென்னை அலுவலகத்தை மூடுகிறது சோனி எரிக்ஸன்சென்னை: உலகில் உள்ள தனது சில முக்கிய கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளது சோனி எரிக்ஸன் நிறுவனம். இதன் மூலம் 2000 பணியாளர்களைக் குறைக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் சென்னையில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் கிளையும் அடங்கும். இதன் மூலம் சென்னையில் மட்டும் 420 பேர் பணியிழப்புக்கு உள்ளாகின்றனர். முக்கோண ஆராய்ச்சிப் பூங்கா - Research Triangle Park..
பவானி ஆற்றில் கழிவு-சாயப்பட்டரை ஆலைகளுக்கு சீல்ஈரோடு: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பவானி ஆற்றில் சாயக்கழிவு நீரை கலந்த சாயப்பட்டரை ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தன்னர். ஈரோடு மாவட்டம் பி.டி அக்ரஹாரம். ஆரியம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாயம் மற்றும் பீளிச்சிங் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து தினசரி பல ஆயிரம் லிட்டர் சயாக்கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த சாய கழிவு..
டாடா சாம்ராஜ்யம்... அடுத்த வாரிசு யார்?டாடா குழுமம்... பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல. இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலையை துவங்கியது டாடா நிறுவனம்தான். இந்தியாவில் விமான சேவையை ஆரம்பித்ததும் டாடாவே. இதுமட்டுமல்ல.....
20 வருடங்களுக்குப் பின் அரிசியை இறக்குமதி செய்யும் இந்தியா!டெல்லி: வழக்கமாக அரிசியை ஏற்றுமதி செய்தே பழக்கப்பட்ட இந்தியா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, முதல் முறையாக அரிசியை இறக்குமதி செய்யவுள்ளது.தொடர் வறட்சி, வெள்ளம் இயற்கையின் சீற்றத்தால் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டு பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டதே இதற்குக் காரணம் என மத்திய அரசு கூறுகிறது.இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 2009, அக்டோபர் மாதம் முதல்..
பறவைத் தாக்குதல் - விமான நிறுவனங்களுக்கு ரூ. 7 கோடி நஷ்டம்!டெல்லி: இந்த ஆண்டு பறவைத் தாக்குதலால் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 7 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.ஏற்கனவே பெரும் பொருளாதார சிக்கலில் அனைத்து விமான நிறுவனங்களும் தவித்து வரும் நிலையில், புதிதாக ஒரு கஷ்டமும் கூட வந்து நஷ்டத்தை கூட்டி விட்டுள்ளது.இந்த ஆண்டு, பறவைத் தாக்குதலால் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 7 கோடி நஷ்டம்..
அமெரிக்காவில் 50 மில்லியன் குடும்பங்கள் பட்டினி!வாஷிங்டன்: அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 6-ல் ஒரு பகுதி கடந்த 2008-ம் ஆண்டு பட்டினி கிடந்தனர் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்தம் அமெரிக்கர்களை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. பல லட்சம் பேர் வேலையிழந்து, குடும்பமாக வீடுகளை விட்டு வெளியேறினர், பிழைப்பு தேடி.இந்நிலையில், இந்த ஒரு..
தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்... அதிர்ச்சியில் மக்கள்!சென்னை: இந்த உயர்வு போதுமா... இன்னும் வேணுமா என்று கேட்கும் அளவுக்கு தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது தங்கம் விலை. இன்று நேற்றும் இன்றும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் இன்று சவரன் விலை ரூ. 13000த்தை நெருங்கியது. புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி சவரன் ரூ 12888 ஆக விற்கப்படுகிறது.கடந்த 17 தினங்களில் பவுனுக்கு ரூ.960..
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குள் நுழையும் ஏவிடி டீதுபாய்: இந்தியாவின் முன்னணி தேயிலைத் தூள் தயாரிப்பு நிறுவனமான ஏவி தாமஸ் அன்ட் கம்பெனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது காலை பதித்துள்ளது.எமிரேட்ஸைச் சேர்ந்த பால்கன் நிறுவனத்துடன் விநியோகஸ்தராக கை கோர்த்துள்ளது ஏவி தாமஸ் நிறுவனம். பால்கன் மூலம் தனது தயாரிப்பை எமிரேட்ஸ் முழுவதும் விநியோகிக்கவுள்ளது.முதலில் தனது ஏவிடி பிரிமீயம் டீ பிராண்டை, ஏவிடி ரைஹானா என்ற..
ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 84வது இடம்டெல்லி: டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (டிஐ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 84வது இடம் கிடைத்துள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.அரசுத் துறை ஊழலை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியலை டிஐ வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு பெர்லினைச் சேர்ந்ததாகும். சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டெயின் ஆகிய நாடுகளில் உள்ளதைப் போன்ற வரி..
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலனுக்கு புற்று நோய்வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸுடன் இணைந்து உருவாக்கியவரான பால் ஆலனுக்கு புற்று நோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பால் ஆலனுக்கு லிம்போமா என்ற வகை புற்று நோய் தாக்கியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் தொடர்பான ஹாட்கின்ஸ் நோய் அவரைத் தாக்கியது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார் ஆலன். தற்போது லிம்போமா புற்றுநோய் அவரைத் தாக்கியுள்ளது தெரிய..
மீண்டும் மலர்கிறது இந்திய-ரஷ்ய வர்த்தக உறவுபெங்களூர்: இந்தியா - ரஷ்யாவுக்கு இடையே கடந்த 20 ஆண்டுகளாக மந்தமாக இருந்த வர்த்தகம் தற்போது, பெருமளவு செழிக்கத் தொடங்கிவிட்டது.கடந்த 1990ல் ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்தியாவுடன் அதிகளவு வர்த்தக தொடர்புகள் கொண்ட நாடாக ரஷ்யா திகழ்ந்தது. அப்போது இந்திய வெளிநாட்டு வர்த்தகத்தில் 16 சதவீதம் ரஷ்யா உடனானதாக இருந்தது. ஆனால், அடுத்த ஆறு ஆண்டுகளிலேயே இந்த..
பேரிழப்பு... ஜப்பான் விமான நிறுவனம் அறிவிப்பு!டோக்யோ: தாங்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால் நிறுவனம் மீண்டும் நிமிர கால அவகாசம் தேவை என்று ஆசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர்லைன்ஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியலைகளை உண்டாக்கியுள்ளது ஜப்பானில்.நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 131.2 பில்லியன் யென் (1.45 பில்லியன் டாலர்) அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது ஜப்பான் ஏர்லைன்ஸ். கடந்த ஆண்டு..