திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் போட்டி- ஜெசென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கடந்த முறை நடந்த பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி இடைத் தேர்தலை அதிமுகவும், மதிமுகவும் புறக்கணித்தன. இதனால் கூட்டணிக் கட்சிகளாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை அதிமுகவை விமர்சித்து வெளியேறி தனியாக போட்டியிட்டன.இந்த நிலையில்...
தமிழர் மறுகுடியமர்த்தல் பணிகள் மந்தம்- ஐ.நாகொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், மறுகுடியமர்த்தும் பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று ஐ.நா. மனிதாபிமான பிரிவு துணைச் செயலாளர் ஜான் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வந்த ஜான் ஹோம்ஸ் இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், கடந்த..
'ராஜபக்சே'..என பெயர் மாற்ற சிங்களர்கள் ஆர்வம்கொழும்பு: தங்களது பெயர்களுக்குப் பின்னால் ராஜபக்சே என போட்டுக் கொள்ள சிங்களர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனராம். இதனால் பெயர் மாற்றத்தைப் பதிவு செய்ய பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் அலை மோதுகிறதாம்.ஈழப் போரின் முடிவைத் தொடர்ந்து சிங்களர்கள் மத்தியில் ஹீரோவாகி விட்டார் ராஜபக்சே. இந்தப் போரின் வெற்றி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைப் புதைத்து விட்டு கிடைத்தது என்பதை..
அரசு வீட்டைக் காலி செய்ய பொன்சேகாவுக்கு உத்தரவு - வாடகை வீடு கிடைக்காமல் அவதிகொழும்பு: அரசு வீட்டை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் காலி செய்து விட வேண்டும் என சரத் பொன்சேகாவுக்கு ராஜபக்சே அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் தான் திண்டாடி வருவதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.இலங்கை கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டார் பொன்சேகா. அவரை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து விட்டது ராஜபக்சே அரசு.இந்த நிலையில் அவர்..
பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்த ரணில் போடும் 4 புதிய நிபந்தனைகள்கொழும்பு: அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த நான்கு புதிய நிபந்தனைகளை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி்த் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே விதித்துள்ளார். அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக அவர்கள் பொன்சேகாவை தேர்வு செய்து வைத்துள்ளனர். இருப்பினும் பொன்சேகாவுக்கு தமிழர்கள் மத்தியில் சுத்தமாக ஆதரவு இல்லை...
யாழ்ப்பாண சாலை-சிறப்பு அனுமதி தேவையில்லை!கொழும்பு: யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு எந்தவித பயண அனுமதியும் தேவையில்லை. ஏ9 சாலையில் பயணம் செய்ய பாதுகாப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை என்று இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு சிறப்பு அனுமதி பெறத் தேவையில்லை என்று வடக்கு மாகா ஆளுநர் சந்திரசிறி தெரிவித்திருந்தார்.இதற்கு முன்பு..
ஈழப் போர் முடிந்து 6 மாதங்களாகியும் நிம்மதி பெறாமல் தவிக்கும் தமிழர்கள்கொழும்பு: ஈழப் போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து 6 மாதங்களாகி விட்டது. இருப்பினும், போருக்குப் பின்னர் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு இன்னும் நிம்மதியும், நிவாரணமும் கிடைக்கவில்லை.30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த ஈழப் போர் மே 18ம் தேதியுடன் முடிவடைந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் முடிவில் லட்சக்கணக்கான தமிழர்கள் விடுதலைப் புலிகள்..
விண்வெளி ஆராய்ச்சியில் இலங்கை-பிரிட்டனுடன் ஒப்பந்தம்கொழும்பு: விண்வெளி ஆய்வில் குதிக்கிறது இலங்கை. இதற்காக விண்வெளி ஆய்வுக் கழகம் ஒன்றை அது ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக இங்கிலாந்தின் சுர்ரே செயற்கைக் கோள் தொழில்நுட்பக் கழகத்துடன் அது ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தி்ல இலங்கை தொலைத் தொடர்புத்துறை முறைப்பாட்டு ஆணையம், கையெழுத்திட்டுள்ளது.விண்வெளி ஆய்வு, முதல் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை உருவாக்குவது தொடர்பான ஆய்வுகளுக்கு சுர்ரே கழகம், இலங்கைக்கு..
போர் வெற்றி-ராஜபக்சே படத்துடன் 1000 ரூபாய் நோட்டுகொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், 1000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது இலங்கை மத்திய வங்கி. இதில் ராஜபக்சே மற்றும் ராணுவத்தினர் படம் இடம் பெற்றுளளது.நான்காவது ஈழப் போர் எனப்படும் ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போரில் பல்வேறு நாட்டு உதவியுடன் விடுதலைப் புலிகளை வீழ்த்தியது இலங்கை அரசு.இதைப் பாராட்டும் வகையிலும்,..
பிரசாரத்தை தொடங்க கட்சியினருக்கு ராஜபக்சே உத்தரவு- விரைவில் அதிபர் தேர்தல்?கொழும்பு: விரைவில் அதிபர் தேர்தலை ராஜபக்சே அறிவிக்கலாம் எனத் தெரிகிறது. கட்சி நிர்வாகிகளிடம் பிரசாரத்தைத் தொடங்குமாறு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளாராம்.இலங்கை அரசியல் சட்டப்படி, ஒரு அதிபர் தனது பதவிக் காலத்தில் நான்கு ஆண்டுகளை முடித்த பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும். ராஜபக்சே நாளையுடன் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்கிறார். இதையடுத்து எப்போது வேண்டுமானாலும்..
சிங்களக் குடியேற்றங்கள்..மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி வெடிக்கும்: சம்பந்தன்கொழும்பு: இலங்கையின் கிழக்குப் பகுதியில் இலங்கை அரசின் ஆதரவுடன் சிங்களர்கள் குடியமர்த்தப்படுவது தொடர்ந்தால், மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்.கொழும்பில் இருந்து வெளியாகும் ‘சண்டை டைம்ஸ்' இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி: வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விஷயத்தை இலங்கை அரசு கையாளும் விதம்..
பெயர் மாறி மீண்டும் உதயமான புதினம் இணையத்தளம்!வன்னி: ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்ற புதினம் இணையத்தளம் தற்போது புதிய பெயரில் மீண்டும் உதயமாகியுள்ளது.ஈழப் போரின் போது ஈழத்தில் நடந்தவற்றை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய இணையத்தளம் புதினம். உள்ளதை உள்ளபடியே சொன்னதும், ஈழப்படுகொலைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியும் வந்த தளம் புதினம்.ஆனால் திடீரென புதினம் தளம்..
இடம் பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் பிரசாரம்கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பினரும், அதன் ஆதரவாளர்களும் உலகம் தழுவிய பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.10க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நடவடிக்கைப் பிரசாரம் தொடங்கியுள்ளது. அன்லாக் தி கேம்ப்ஸ் என்ற பெயரில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு்ளது.கனடாவில் நம்பிக்கை வளையம், தெரு..
இலங்கை: அத்தியாவசிய பிரிவில் எண்ணெய்-மின்சாரம்கொழும்பு: எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீராதாரம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைப் பிரிவில் இலங்கை அரசு சேர்த்துள்ளது. விதிப்படி வேலை என்ற வேலை நிறுத்த அறிவிப்பை சில தொழிற்சங்கங்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து இலங்கை நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை மற்றும் துறைமுக, விமானப் போக்குவரத்து அமைச்சர் சமல் ராஜபக்சே கூறுகையில், சிலோன் பெட்ரோலியம்..
மாவீரர் நாள் உரையில் அடுத்தகட்ட அறிவிப்பு-எல்டிடிஇகொழும்பு: போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம். வழக்கம் போல வரும் மாவீரர் நாள் உரையின்போது எங்களது அடுத்த கட்ட நகர்வு குறித்து அறிவிப்போம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.மாவீரர் நாள் உரையை பொட்டு அம்மான் படிப்பார் என்று ஒரு தகவல் நிலவுகிறது. இதனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் அனைவர் மத்தியிலும் ஒருவித..