பொன்சேகாவுக்கு சந்திரிகா திடீர் ஆதரவுகொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு முன்னாள் அதிபரான சந்திரிகா குமாரதுங்க திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார்.இப்போதைய அதிபரான மகிந்த ராஜபக்சேவின் கட்சியைச் சேர்ந்தவரான சந்திரிகா, எதிர்க் கட்சியைச் சேர்ந்த பொன்சேகாவுக்கு ஆதகவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பையும் அந் நாட்டு அரசியலில் பெரும் திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இது ராஜபக்சேவுக்கு அரசியல்ரீதியாக..
அதிபர் தேர்தல் நாள் - துக்க தினமாக அனுசரிக்க விடுதலைப் புலிகள் அழைப்புகொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெரும் ஜனவரி 26ம் தேதியை துக்க தினமாக அனுசரிக்குமாறு இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.இதுகுறித்து விடுதலைப் புலிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை...பாசமிகு தமிழீழ மக்களே இலங்கையின் தேசிய இனங்களுக்கு உண்டான ஜனாதிபதி தேர்தல் என இலங்கை தேர்தல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த தேர்தல்.தேசிய இனங்களில் ஒன்று என..
ராஜபக்சேவுடன் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை: சந்திரிகா மறுப்புகொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவருடன் பிரச்சார மேடையில் தோன்றும் திட்டம் எதுவும் இல்லை என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா ஆதரவளிப்பதாக செய்திகள் வெளியாயின.ராஜபக்சேவுடன் இணைந்து ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் அத்தகவல்களை..
இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறதுகொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. நாளை நள்ளிரவுக்குள் கட் அவுட்கள், போஸ்டர்களை அரசியல் கட்சிகள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.இலங்கையில் ஜனவரி 26ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ராஜபக்சே, பொன்சேகா, சிவாஜிலிங்கம் உள்பட 22 பேர் போட்டியில் உள்ளனர். இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே அதிக..
பிரபாகரனின் உடல் என இலங்கையால் காட்டப்பட்டவர் இவரா?கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். இதுதான் அவருடைய உடல் என்று இலங்கை சில படங்களையும், வீடியோவையும் வெளியிட்டது. ஆனால் இலங்கை காட்டிய அந்த இறந்த உடலைப் போலவே அச்சு அசலாக இருக்கும் இலங்கை ராணுவ வீரர் ஒருவரின் வீடியோ படம் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு மே 18ம் தேதி..
தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு ஓட ராஜபக்சே திட்டம்- விமானம் தயார்?!கொழும்பு: அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் நாட்டை விட்டு வெளியேற மகிந்தா ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவருடைய குடும்பத்தினரை இலங்கையிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்ல விமானம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஈழ தமிழ் இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கையில் அதிபர் தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ராஜபக்சே தோல்வி அடைவார் என்று இலங்கை முழுவதும் பலமாக..
யாழ்ப்பாணத்தில் 32% தமிழர்களுக்கே வாக்கு அட்டைகொழும்பு: அதிபர் தேர்தலில் வாக்களிக்க இதுவரை யாழ்ப்பாணத்தில் வெறும் 32 சதவீதம் பேருக்கு மட்டுமே வாக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளனவாம்.தமிழர்கள் மட்டுமே பெருமளவில் வசிக்கும் முக்கியப் பகுதி யாழ்ப்பாணம். ஆனால் இங்கு இதுவரை 32 சதவீதம் பேருக்கு மட்டுமே வாக்களிக்கும் அட்டை தரப்பட்டுள்ளதாம்.யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 7,21,389. இவர்களில் கடந்த 16-ம் தேதி வரை..
விரக்தியில் ராஜபக்சே-மீண்டும் மதுவை நாடுகிறார்!கொழும்பு: உலகிலேயே மிகப் பெரிய அளவில் மன நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஒரே நபராக மகிந்தா ராஜபக்சேதான் இருப்பார். அந்த அளவுக்கு அவரைச் சுற்றிலும் ஏகப்பட்ட நெருக்கடிகள். அத்தனயையும் சமாளிக்க முடியாமல் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ள ராஜபக்சே இடையில் நிறுத்தி வைத்திருந்த மதுப் பழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளாராம்.அதிபர் தேர்தலில் கிட்டத்தட்ட தோல்விதான் கிடைக்கும் என்ற நிலையில் உள்ளார் ராஜபக்சே...
'பிரபாகரன் உடல்' பற்றிய தொழில்நுட்பத்தை ராஜபக்சேவிடம்தான் கேட்க வேண்டும்!- புலிகள் கிண்டல்கொழும்பு: சாலச் சிறந்த ஆதாரமாக பிரபாகரனே விரைவில் கண்முன் தோன்றுவார் வெகு விரைவில், என புலிகளின் செய்தித் தொடர்பாளர் ச.தமிழ்மாறன் அறிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமாக பாதுகாப்பாக உள்ளார் என்று விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.lttepress.com செய்தி வெளியிட்டிருந்தது.ஆனால் இது தொடர்பில் பலத்த சந்தேகங்கல் எழுப்பப்பட்டன. அனைவரது..
பிரபாகரன் பாதுகாப்பாக உள்ளார்!!-புலிகள்கொழும்பு: பிரபாகரன் பற்றி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அவர் உயிருடன் நலமாக, பாதுகாப்பாக உள்ளார் என்றும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பு குறித்து மீண்டும் மாறுபட்ட தகவல்கள் வரத் துவங்கியுள்ளன.இறுதிகட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அவரது உடலையும் காட்டியது. ஆனால் அவர் உடல் என..
அதிபர் தேர்தல்-புறக்கணிக்கும் திரிகோணமலை தமிழர்கள்திரிகோணமலை: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் அதிபர் தேர்தலில் வாக்களிக்க சுத்தமாக ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.பொன்சேகாவாக இருந்தாலும் சரி, ராஜபக்சேவாக இருந்தாலும் சரி, யாராலும் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. பின்னர் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று இவர்கள் குமுறுகிறார்கள்.இதுகுறித்து திரிகோணமலையைச் சேர்ந்த ரமேஷ் என்ற தமிழர்..
இலங்கை சிறையில் அப்பாவிகள்-மனித உரிமைக் குழுகொழும்பு: இலங்கை சிறையில் விசாரணையின்றி ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை ஆசிய மனித உரிமைக் குழுவினர் நேரில் ஆராய்ந்து, அரசை கண்டித்துள்ளனர். கொழும்பு வெலிக்கட சிறையில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் கண்டி நகரில் உள்ள போகம்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள், சிறிய குற்றங்களுக்காக..
தமிழ் எம்.பிக்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா டெலோவிலிருந்து நீக்கம்கொழும்பு: தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக திகழ்ந்து வரும் சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகிய இருவரும் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து (டெலோ) நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.இதுகுறித்து அடைக்கலநாதன் மற்றும் செயலாளர் பிரசன்னா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் கட்சியின் அனைத்து பதவி நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.கட்சியின்..
வட-கிழக்கு மாகாண இணைப்பு: ராஜபக்சே நிராகரிப்புகொழும்பு: வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறி விட்டார் ராஜபக்சே.தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாகாணங்கள் இந்திய - இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்டன. பின்னர் இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி இந்த இணைப்பு ரத்து செய்யப்பட்டது.ஆனால் இரு மாகாணங்களையும் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர் கட்சிகள்..
பிரபாகரன் மாமியார் விடுதலை-சிவாஜிலிங்கம்கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மாமியார் சின்னம்மா விடுவிக்கப்பட்டு அவருடைய உறவினர்களிடம் சிங்கப்பூரில் சேர்ந்துள்ளார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியும், அதிபர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுபவருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரை ராணுவம் விடுவித்தது.இந் நிலையில் ராணுவத்தின் பிடியில் இருந்த பிரபாகரனின் மாமியார்..