Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம்
தமிழக செய்திகள்
What is this?

சென்னை வந்த கப்பலில் அணு ஆயுதங்களா?
சென்னை: மால்டாவில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பலில் அணு ஆயுதப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து அந்தக் கப்பலை நடுக் கடலில் தடுத்து நிறுத்தி சென்னைக்கு வரவழைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.கார்லான்ட் என்ற கப்பல் விசாகப்பட்டனத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை சென்னை துறைமுகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில்,...


முதல்வர் கருணாநிதி மகாபலிபுரத்தில் ஓய்வு - வசனம் எழுதுவதற்காக
சென்னை: முதல்வர் கருணாநிதி இன்று காலை பமகாபலிபுரம் சென்று ஓய்வு எடுத்தார். ஆனால் பொன்னர் சங்கர், பெண் சிங்கம் படங்களுக்கான வசனத்தை எழுதுவதற்காக முதல்வர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணியளவில், மகாபலிபுரம் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் அவர் தங்கினார்.முதல்வருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் உடன் சென்றிருந்தார்...

திருச்செந்தூர்-வந்தவாசிக்கு டிச.19ல் இடைத்தேர்தல்
சென்னை: திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 19ம் தேதி நடைபெறும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.திருச்செந்தூர் சட்டசபைத் தொகுதிக்கு அதிமுகசார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் சமீபத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர்ந்தார். வந்தவாசி சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெயராமன் சமீபத்தில் மரணமடைந்தார்...

தமிழக மீனவர்களிடம் இலங்கை பாலியல் கொடுமை?
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் தங்களைப் பிடித்து நிர்வாணப்படுத்தி பாலியல் கொடுமைக்குட்படுத்தியதாக தமிழக மீனவர்கள் புகார் கூறுகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.2 நாட்களுக்கு முன்பு, 597 விசைப் படகுகளில் ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலில் சென்றனர். இவர்களில் பலர் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு இலங்கைக் கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை சுற்றி..

சிதம்பரம்-முதலையிடம் சிக்கி பெண் பலி!
சிதம்பரம்: சிதம்பரம் அருகே வாய்க்கால் ஓரம் ஆடு மேய்த்த பெண்ணை முதலை கடித்து குதறியது. இதில் அப்பெண் பரிதாபமாக இறந்தார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை ஊராட்சி வேலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சாவித்திரி (45). இவர், மேலாறு வடிகால் வாய்க்கால் ஓரம் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.வாய்க்கால் கரையில், புல் அறுத்துக் கொண்டிருந்த போது நீரிலிருந்து திடீரென..

கருணாநிதியின் 'மெளனத்தின் குதூகலம்'-வைகோ
சென்னை: மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற முதல்வர் கருணாநிதி செய்யும் துரோகம் மிகக் கொடுமையானது. இதனால் தமிழினம் அவரை ஒருபோதும் மன்னிக்காது என்று வைகோ கூறியுள்ளார்.அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு பிரபாகரன் எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இலங்கையில் இன்றைய விளைவுகள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்து வைகோ..


கருணாநிதியின் 'மெளனத்தின் குதூகலம்'-வைகோ
ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்...ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரணில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்.ரணில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவது..

அரசு பஸ் கவிழ்ந்து 2 மாணவர் பலி- 35 பேர் காயம்
ராசிபுரம்: மல்லூர் அருகே அரசு டவுன் பஸ், மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில், பள்ளி மாணவர்கள் இருவர் பலியாயினர். 35 பேர் படுகாயமடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், மலையாம்பாளையம் அருகே குறுகிய சாலை வழியாக சென்றது. அப்போது, பஸ் வளைவில் திரும்பிய போது, அங்கிருந்த மின் கம்பத்தில்..

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம்-சிபிஎம்
பரமக்குடி: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலை கண்டித்து இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் கூறினார்.பரமக்குடியில் மீன் பிடித்தொழில் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் செயலாளர் என்.வரதராஜன் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக மீனவர்கள் மீது இலங்கை..

7 மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் மாற்றம்
சென்னை: தேமுதிகவில் மாவட்ட நிர்வாகிகள் ஏழு பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்டம் வேலாம்பாளையம் நகர அவைத் தலைவர் கேபிள் பாபு கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக கட்சியின் தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில்,காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய அவைத் தலைவர் செல்வம், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றிய பொருளாளர் மாயாண்டி, திருச்சி மாநகர..

பயணிக்கு நெஞ்சுவலி-தரையிறங்கிய விமானம்
சென்னை: சென்னையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் லங்கா விமானம் இன்று காலை 10.30 மணியளவில் 267 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.புறப்பட்ட 10 நிமிடங்களில் விமானத்தில் இருந்த ரஃபி அகமது (வயது 52) என்ற பயணிக்கு திடீரென..

ஸ்வைன்: மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டுக்கு அனுப்புகின்றனர்-ஜெ. புகார்
சென்னை: கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல், மாத்திரைகளை தந்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் நோயால் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் விஷக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும்,பன்றிக் காய்ச்சல் சோதனை..


சிறுமியை கற்பழித்த பள்ளி மாணவன் கைது
குளச்சல்: 14 வயது சிறுமியை கற்பழித்த பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர்.வெள்ளிச்சந்தை அருகே சரலை அடுத்த ஆசாரிவிளை காலனியை சேர்ந்தவர் சுமதி. 9ம் வகுப்பு படித்த இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் ராஜ் மகன் வி்க்னேஷ். இவர் இப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். விக்னேஷ் வீட்டுக்கு சுமதி அடிக்கடி..

தூத்துக்குடியில் ரூ. 209 கோடி திட்டங்கள்-ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 209 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். துணை முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி வந்தார். எட்டையாபுரம் அருகே உள்ள ராமனூரில் ரூ.2.75 கோடியில் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் மேல அரசடியில் இருந்து கன்னிராஜாபுரம் வரையில் ரூ.7.85 கோடியில் 48.75 கி.மீ..

வேன் கவிழ்ந்து ஆயுதப்படை காவலர் பலி
வள்ளியூர்: நாங்குநேரி அருகே போலீஸ் வேன் நடுரோட்டில் கவிழ்ந்து, ஆயுதப்படை காவலர் பலியானார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடியில் நேற்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா பாதுகாப்பு பணிக்காக நெல்லை, கன்னியாகுமரி, மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். நேற்று காலை குமரி மாவட்ட எஸ்.பி சண்முகவேல் தலைமையில் நாகர்கோவில் ஆயுதப்படை போலீசார் நாகர்கோவிலில் இருந்து வேனில்..

More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next  
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India