பெரியாறு அணை வழக்கு ஒருங்கிணைப்பாளராக பொன்முடி நியமனம்சென்னை: முல்லைப் பெரியாறு அணை வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அந்த வழக்கின் ஒருங்கிணைப்பாளராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை தமிழக அரசு நியமித்துள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கிடையே முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் தற்போது...
ஜெய்ராம் ரமேஷுக்கு கருப்புக் கொடி காட்டிய பெரியார் தி.க.கோயம்பத்தூர்: கோவைக்கு வந்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு பெரியார் தி.கவினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து 18 பேரைக் கைது செய்தனர் போலீஸார்.வனத்துறை சார்பில் கோவையில் இன்று நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கோவை வந்துள்ளார்.இந்த நிலையில், முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கு..
சட்டசபை இடைத் தேர்தல் - யார் யார் போட்டியிட வாய்ப்பு?சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத் தேர்தலில் திமுக, அதிமுக போட்டியிடுவது மட்டுமே இப்போதைக்கு உறுதியாகியுள்ளது. தேமுதிக நிச்சயம் போட்டியிடும். அதேசமயம், இடதுசாரிகள், பாமகவின் நிலை பெரும் குழப்பமாக உள்ளது.டிசம்பர் 19ம் தேதி திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட திமுகவும், அதிமுகவும் தயாராகி விட்டன. இந்த இரு கட்சிகளும்..
கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன் பயன்படுத்த தடை வருமா?சென்னை: காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் செய்த காம சேட்டைகளைப் பார்க்கும்போது கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கலாம் என்று மக்களிடையே கருத்து எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகரான தேவநாதன் தான் செய்த காமலீலைகள் குறித்து அளித்துள்ள வாக்குமூலத்தில், 2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் கேமரா வசதி..
பெரியாறு அணை - வைகோ பிரசாரப் பயண தேதி மாற்றம்சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ள இருக்கும் பிரசாரப் பயணத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.புதிதாக அறிவித்துள்ளபடி, மதுரை மாவட்டத்தில் நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதியும், சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 2ம் தேதியும், திண்டுக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதியும், தேனி மாவட்டத்தில் டிசம்பர் 4, 5, 6ம் தேதிகளிலும்..
சேட்டைகள் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி: செக்ஸ் அர்ச்சகர் வாக்குமூலம்காஞ்சிபுரம்: பல ஆண்டுகளாக கோவிலில் காம லீலைகளை அரங்கேற்றி வந்த செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன், தனது சேட்டைகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பதை போலீசிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆபாச அர்ச்சகர் தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தேவநாதனை போலீசார் 2 நாள்..
பெரியாறு அணை: தமிழக மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி - சாமிசென்னை: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்களை முதல்வர் கருணாநிதி ஏமாற்றுகிறார் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுப்பிரமணிய சாமி இதுதொடர்பாக கூறியதாவது:முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணையை அரசியல் சாசன பெஞ்சுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்ததையடுத்து, இந்த பிரச்னையில் யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை..
எண்கணிதப்படி சிவகாசி பெயரை மாற்றக் கோரி நகராட்சி தீர்மானம்சிவகாசி: சிவகாசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கவும், நகரின் பொது நன்மைக்காகவும், ஆங்கிலத்தில் Sivakasi என எழுதப்படும் பெயரை Sivakaasi என கூடுதலாக ஒரு ஏ சேர்க்க வேண்டும் என்று கோரி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுவது சிவகாசி. பட்டாசு, தீப்பெட்டித் தொழில், அச்சுத் தொழில் ஆகியவற்றில் முன்னணியில் உள்ள குட்டி நகரம் சிவகாசி...
சமத்துவ மக்கள் கட்சி கோவை நிர்வாகி விலகல் - சமத்துவம் இல்லை என புகார்கோவை: மக்கள் நலனுக்காக செயல்படாமல் ஜாதிக் கட்சி போன்று அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சி செயல்படுகின்றது. அதனால் நான் அந்த கட்சியில் இருந்து எனது பதவியை ராஜினாமா செய்கின்றேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கோவை மாநகர் செயலாளர் உபைதூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து உபைதூர் ரகுமான் கூறுகையில்,சரத்குமார் திரையுலகிற்கு வந்த போது..
பன்றிக் காய்ச்சலுக்கு புதுச்சேரியில் 7வது பலிபுதுச்சேரி: பன்றிக் காய்ச்சலுக்கு புதுவையில் 7வது பலியாக 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த சிறுவன் நெய்வேலியைச் சேர்ந்தவன்.நெய்வேலியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ராம்குமார் என்பவன் தொண்டை வலி, காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.அங்கு அவனுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று சிறுவன் உயிரிழந்தான்.இவனையும் சேர்த்து..
தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்சென்னை: குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலை கொண்டிருப்பதால் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.இன்றைய மழை நிலவரம்...இதுகுறித்து இன்று வானிலை..
படகுகளில் கருப்பு கொடி - மீனவர் தினம் துக்க தினமாக அனுசரிப்புகன்னியாகுமரி: உலக மீனவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கன்னியாகுமரி பகுதிகளில் வள்ளம் மற்றும் கட்டு மரங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் நவ 21ம் தேதி உலக மீனவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் மீனவர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளை வலியுறுத்தி பொது கூட்டம், தொடர் ஜோதி ஓட்டம், பேரணி போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.இந்த ஆண்டு..
தொகுதி வரலாற்றில் 2 வது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் திருச்செந்தூர்திருச்செந்தூர்: இதுவரை 12 பொது தேர்தலையும், ஒரு இடைத் தேர்தலையும் சந்தித்துள்ள திருச்செந்தூர் தொகுதி தற்போது இரண்டாவது இடைத்தேர்தலை டிச 19ம் தேதி சந்திக்கிறது. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி 12 பொது தேர்தலை சந்தித்துள்ளது. 1983ம் ஆண்டு இடைத்தேர்தலை சந்தித்துள்ளது. தற்போது இரண்டாவது முறையாக இடைத் தேர்தலை சந்திக்கிறது இத்தொகுதி.1957..
அதிமுகவின் ராதாபுரம் பஸ் நிலையப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்புநெல்லை: ராதாபுரத்தில் இன்று ஆர்பாட்டம் நடத்த அதி்முகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டக் கோரி அங்கு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.ஆனால் இதற்கு போலீசார் அனு்மதி மறுத்து விட்டனர். இதுகுறித்து வள்ளியூர் டிஎஸ்பியிடம் கொடுத்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் செந்தூர்பாண்டியன், மாநகர செயலாளர்..
முல்லைப் பெரியாறு அணை ஸ்திரமாக உள்ளது - தமிழக அரசுசென்னை: முல்லைப் பெரியாறு அணை ஸ்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. கேரளா கூறுவது போல அதில் எந்தவித நீர்க்கசிவும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம் அனுப்பியுள்ள கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையில் நீர்கசிவு இருக்கிறது என்று கேரள அரசு கூறியதாக..