Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: அரசியல்
சென்னை:அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. வரும் காலங்களிலும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்..சென்னை, லாயிட்ஸ் சாலையிலுள்ள அதிமுக தலைமையகம் வந்த ஜெயலலிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:கேள்வி: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா?ஜெயலலிதா: இடைத் தேர்தல்களில் அதிமுக போட்டியிடும்.கேள்வி: கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை.

மும்பை: மும்பை இந்தியர் அனைவருக்கும் சொந்தம் என்று கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கரை கண்டித்த பால் தாக்கரேவுக்கு எதிராக கருத்து சொன்ன நடிகரின் வீடு மீது சிவசேனா தொண்டர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்தியர் அனைவருக்கும் மும்பை சொந்தம் என்று கூறியதற்கு சச்சின் தெண்டுல்கருக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதற்கு இந்தி-போஜ்புரி மொழி நடிகரும், பாடகருமான

கொழும்பு: ஒரு வழியாக பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் இலங்கை கூட்டுப்படைத் தலைவர் சரத் பொன்சேகா. தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 2 நாட்களில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை கூட்டுப்படைத் தலைவராக இருந்து வந்த பொன்சேகாவை எதிர்க்கட்சி கூட்டணி அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு ஒப்ப அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கொழும்பு: இலங்கை சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்பட்டால் இந்தியா தனக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்று அதிபர் ராஜபக்சே ரகசிய கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கையின் ராணுவத் தளபதி பொன்சேகா கூறியதும், பொன்சேகா உடனடியாக ராணுவ தலைமைப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதும் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை

சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சியினரும் கையெழுத்திடும் ஒரு ஒப்பந்தத்தை முதல்வர் கருணாநிதி ஏற்படுத்தினால்தான் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.நிருபர்களிடம் அவர் பேசுகையில்,சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேச

சென்னை: பாஜகவில் பதவி சுகங்களை அனுபவித்து விட்டு, இப்போது இங்கு இருப்பதை விட காங்கிரசில் இருந்தால் வாழ்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றிருக்கிறார் திருநாவுக்கரசர் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.அவர் அளித்துள்ள பேட்டியில்,7 ஆண்டுகளாக திருநாவுக்கரசர் எங்களுடன் பணியாற்றினார். கட்சியில் அதிகபட்சமான மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது. கட்சியில் இணைந்தவுடன் அவருக்கு

தியோபந்த் (உத்தரப் பிரதேசம்): வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஜமாயத் உலாமா இ ஹிந்த் என்ற முக்கிய இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.இந்த அமைப்பின் 3 நாள் மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்தும் 10,000 மேற்பட்ட மதகுருமார்கள், மத அறிஞர்கள் கலந்து கொண்டனர்.சுமார் 5 லட்சம் பேர்

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் வரும் 31ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் எழுச்சி மிகு கண்மணிகளே! உங்களைச் சந்தித்து மாதங்கள் கடந்து விட்டாலும், எந்நேரமும் உங்கள் நினைவோடு வலம்

திண்டிவனம்: டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது. தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.திண்டிவனத்தில் நடந்த ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஈழப்

சென்னை: தமிழ்நாட்டில் ரவுடிகளைக் கண்டு போலீசார் அஞ்சும் நிலை உள்ளதாக அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் 3வது முறையாக அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் இன்று சென்னை அருகே வானகரத்தில் நடைபெற்றன.மக்களவைத் தேர்தல் படுதோல்வி்க்குப் பின் மே 27ம் தேதி ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India