புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி மது பாட்டில்களை கடத்திய பிளஸ் டூ மாணவன் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.புதுச்சேரி வில்லியனூர் பகுதியிலிருந்து நள்ளிரவில் வாகனங்களில் போலி மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக, கலால் துறை ஆணையரான கலெக்டர் ராகேஷ் சந்திராவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின்படி துணை ஆணையர் அன்பழகன்,
நெல்லை: காதல் தகராறில் மருத்துவக் கல்லூரி மாணவரைக் கடத்திக் கொல்ல முயன்றது ஒரு கும்பல். அதிலிருந்து தப்பி அவர் உயிர் பிழைத்துள்ளார்.பாளை மருத்துவ கல்லூரி மாணவர் கந்தசாமி பிரபு என்பவர் காதல் பிரச்சனையால் கடத்தப்பட்டதாகவும் அவரை மீட்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவரை சித்ரவதை செய்து கொலை செய்ய முயன்றபோது அதிலிருந்து
மொகாதீஷு: 15 இந்தியர்கள் உள்பட 18 பேருடன் பனாமா நாட்டுக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து சோமாலியா தலைநகர் மொகாதீஷுவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக ஜூபா ஜெனரல் டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனத்திடமிருந்து அல் மிஸான் என்ற கப்பலை சில சோமாலியா வர்த்தகர்கள் வாடகைக்கு அமர்த்தினர்.இந்தக் கப்பலைத்தான் தற்போது சோமாலிய
செங்கோட்டை: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரூ. 1.28 லட்சம் மதிப்புள்ள கோழி குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு நூதன முறையில் பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. திடீர் திடீரென போலீசார் அதிரடி சோதனையால் எரிசாராயம், அரிசி உள்ளிட்டவை பிடிபடுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு பகுதியை சேர்ந்த கோழிகுஞ்சு வியாபாரி ஒருவர் புளியரை பகுதியில் மொத்தமாக 80
புதுக்கோட்டை: இலங்கை கடற்படை காடையர்களால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள 18 மீனவர்களையும் விடுவிக்கவும், மீட்கவும் கோரி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் இறங்கியுள்ளனர். இதனால் அங்கு மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் கடல் பகுதியில் கடந்த 2-ந் தேதி மீன்பிடித்து கொண்டு இருந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடாவடியாக சிறைபிடித்து சென்றனர். அவர்களுடைய
நெல்லை: கணவருடன் சினிமா பார்த்துக் கொண்டிருந்த புதுப்பெண் மாயமானார். அவரை யாரோ கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.மானூர் அருகேயுள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த பரமசிவன் மகன் வேல்முருகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு திருமணமாகி 6 நாட்கள் ஆகிறது. நேற்று காலை புதுமண தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பெங்களூர்: முதல்வர் எதியூரப்பாவை பதவி நீக்கம் செய்தே ஆக வேண்டும் என்று நெருக்கடி அளித்து வரும் அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள் தங்களது ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேரை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளனர்,அதிருப்தி கோஷ்டிக்குத் தலைமை தாங்கும் சுற்றுலாத்துறை அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி, முதல்வர் பதவியிலிருந்து எதியூரப்பாவை நீக்கியே ஆக வேண்டும் என்று
கோலாலம்பூர்: 24 இந்தியர்கள் இருந்த கப்பல் ஒன்றை சோமாலிய கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர். 22,000 டன் எடை கொண்ட சரக்குகளுடன் சென்று கொண்டிருந்த அந்தக் கப்பலின் பெயர் எம்.வி. அல் காலிக். இந்தக் கப்பலில் 26 பேர் இருப்பதாகவும், அவர்களில் 24 பேர் இந்தியர்கள், இருவர் பர்மியர்கள் என்றும் நேட்டோ அமைப்பின் கொள்ளைத் தடுப்புப்
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கேரளாவுக்குக் கடத்த முயன்ற 275 கேன் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.நெல்லை மாவட்டம் புளியரை அருகே கேரள மாநில எல்லையில், தமிழக அரசின் சோதனைச் சாவடி உள்ளது. இந்தப் பகுதி வழியாக இன்று பெருமளவில் எரிசாராயம் கடத்தப்படவிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து இன்று அதிகாலை போலீஸார்
சென்னை: போலீஸ்காரர்கள் போல் நடித்து நர்ஸை கடத்திச் சென்று கற்பழித்த வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 32 வயதான நளினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நர்சாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.கடந்த 18ம் தேதி இரவு நளினி தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு