வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாகாண ஆளுநர் தேர்தலில் அதிபர் பாரக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் ஒபாமா ஆதரவாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.அதிபர் தேர்தலின்போது நியூஜெர்சியில்தான் ஜனநாயகக் கட்சிக்கு பெருமளவில் வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் ஒபாமா தரப்பை கவலைக்குள்ளாக்கியுள்ளது.விர்ஜீனியா மாகாண தேர்தலில் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி வேட்பாளர் பாப்
மும்பை: இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்று 410 புள்ளிகள் வரை குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சநதித்தார்கள். கடந்த வாரம் பங்குச் சந்தை தொடர்ந்து சரிவுக்குள்ளானதால் கிட்டத்தட்ட ரூ 66000 கோடி வரை பெரிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பைச் சந்தித்தன. இந்நிலையில் இந்த வாரமும் வீழ்ச்சியுடன்தான் வர்த்தகம் துவங்கியது. நேற்று 70 புள்ளிகள் வரை
டெல்லி: இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 4.1 சதவீதம் குறைந்துவிட்டது.சர்வதேச பொருளாதார தேக்க நிலையும், பன்றி காய்ச்சல் குறித்த அச்சமுமே இதற்குக் காரணம். செப்டம்பரில் இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 3.17 லட்சம் தான். இவர்கள் மூலம் ஈட்டப்பட்ட அன்னியச் செலாவணி வருவாய் ரூ.3,978 கோடியாகும்.நாட்டின் மொத்த
டெல்லி: பண வீக்கம் மேலும் சரிந்து 0.70 சதவீதமாக இருந்தது.கடந்த வாரம் பண வீக்கம் 0.83 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்கத்தின் விகிதம் 0.70 சதவீதமாக சரிந்தது.உணவுப் பொருட்களின் விலை லேசாக குறைந்ததால் பண வீக்கத்தின் அளவும் லேசான சரிவைச் சந்தித்துள்ளது.
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 236 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் சரிந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 236.44 புள்ளிகள் சரிவைக் கண்டது. இதன் மூலம் சென்செக்ஸ் அளவு 16,898.11 புள்ளிகளாக இருந்தது. கடந்த மூன்று சீசன்களில் சென்செக்ஸ் 441.55 புள்ளிகள் உயர்வைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.தேசிய பங்குச் சந்தையான நிப்டியும்
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை 17 பைசா உயர்ந்தது. தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 47.57 ஆக உள்ளது.அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவைக் கண்டதால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.அமெரிக்க வேலைவாய்ப்புச் சந்தையில் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் முன்னேற்றம் ஏற்படாததால் டாலரின் மதிப்பு
மும்பை: மும்பை பங்கு வர்த்தகத்தில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிந்தது.நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 61.93 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 162.97 புள்ளிகள் சரிந்து 16,618.43 ஆக இருந்தது.ரியல் எஸ்டேட், ஐடி பிரிவு பங்குகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கியக் காரணம்.அதேபோல தேசிய பங்குச்
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறதாம்.சென்னை விமான நிலையத்தில் பெரும் பொருட் செலவில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.இந்த நிலையில் விமான நிலையத்தில் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறதாம்.ஏப்ரல் - ஜூன் மாதங்களில் உள்ளூர் பயணிகளின் எண்ணிக்கை
தூத்துக்குடி: குஜராத்திலிருந்து 28,000 டன் உப்பு கப்பல் இன்று தூத்துக்குடிக்கு வருகிறது. இதனால் தூத்துக்குடியில் உப்பு விலை சரியும் என்பதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.உப்பு உற்பத்திக்கு பெயர் பெற்ற தூத்துக்குடியிலிருந்து இலங்கை, இந்தோனேசியா, சிங்கபூர், ஆகிய நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதியாகிறது. ஆனால் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தூத்துக்குடியில் உப்பு விளைச்சல் 50 சதவீதம் குறைந்தது.அதே நேரத்தில்
டெல்லி: பிசி எனப்படும் பர்சனல் கம்ப்யூட்டர்களின் விற்பனை பெரும் சரிவைக் கண்டுள்ளது. இந்த நிதியாண்டில் கம்ப்யூட்டர் விற்பனை -7 சதவீதமாக சரிந்துள்ளது.பொருளாதார சீர்குலைவு கம்ப்யூட்டர்களையும் இப்போது கடிக்கத் தொடஙகிவிட்டது. முதல் முறையாக கம்ப்யூட்டர் விற்பனை வளர்ச்சி விகிதம் நெகட்டிவ் அளவை எட்டி, -7 சதவீதமாக உள்ளது.கடந்த ஆண்டில் இது 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் பழையபடி மீண்டும்