சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும்
இயக்குநர் சசிகுமார் இனி வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்கும் நேரம்... அவரது சுப்ரமண்யபுரம் இந்தியாவில் அண்டை மாநில திரையுலகினரிடம் விருதுகள் வாங்கிய கையோடு இப்போது உலகம் சுற்றத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகருக்கு 5 நாள் பயணமாக சென்றிருந்தார் இயக்குநர் சசிகுமார். இங்கு நடந்த Asiatic Film Mediacle எனும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட
கிட்டத்தட்ட ரூ. 150 கோடி நஷ்டத்தில் செயல்படும் மலையாளத் திரையுலகைக் காப்பாற்றுவதற்காக தங்களது சம்பளத்தைக் கணிசமாக குறைத்துக் கொள்வதாக மலையாள திரையுலக நடிகர் நடிகைகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நடந்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. இருப்பினும், எவ்வளவு சம்பளத்தைக் குறைப்பது என்பது இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை.இக்கூட்டத்தில், நடிகர் சங்கம் சார்பில்
இளமை இதோ இதோ படத்தில் தனக்கு ஜோடியாக பிரேமப்பிரியாவைத்தான் புக் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து அவரை தனக்கு ஜோடியாக்கியுள்ளாராம் விவேக்.வசனங்களில் மட்டுமல்லாமல், கூட நடிக்கும் நடிகைகள் விஷயத்திலும் வெயிட்டாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது விவேக்கின் வழக்கம்.சமீப காலமாக அஞ்சுவுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது பிரேமப் பிரியா என்ற
"என்னை அடுத்த நமீதா என்கிறார்கள். ஆனால் உண்மையில் நமீதா அளவுக்கு கவர்ச்சி காட்ட எனனால் நிச்சயமாக முடியாது. நான் வெரைட்டியான ரோல்களில் நடிக்க விரும்புகிறேன்" என்கிறார் நடிகை ஹேமமாலினி.இந்திர விழாவில் நமீதாவின் கிட்டத்தட்ட 'சக்களத்தி'யாக நடித்தவர் ஹேமமாலினி. கிளமாரில் நமீதாவுக்கு சரியான போட்டி எனும் வகையில் கவர்ச்சியில் கலக்கினார் அந்தப் படத்தில்.அதன் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள்
கோலிவுட்டுக்குப் புதிய அம்மா கிடைத்துள்ளார். அந்த லேட்டஸ்ட் அம்மா நடிகை - யுவராணி.தமிழ் சினிமாக்காரர்கள் கைவசம் உள்ள முக்கியமான சென்டிமென்ட் கேரக்டர் அம்மா. அம்மா கேரக்டரில் முன்பெல்லாம் பழம்பெரும் நடிகைகள்தான் பெரும்பாலும் நடிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் இளம் அம்மாக்களைத்தான் கோலிவுட்டினர் விரும்புகின்றனர். சீதா, சரண்யா போன்ற நடுத்தர வயது நடிகைகள் இப்போது அம்மா கேரக்டரில் நிறைய நடித்து
சுப்ரமணியபுரம் படத்தின் நாயகி ஸ்வாதிக்கு, ஆந்திர மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகைக்கான நந்தி விருது கிடைத்துள்ளது. தெலுங்கில் வெளியான அஷ்ட செம்மா படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.ஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் தெலுங்குப் படக் கலைஞர்களுக்கு நந்தி விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. தற்போது 2008ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அஷ்டசெம்மா படத்தில் சிறப்பாக
17 வயதிலேயே நான் நடிக்க வந்து விட்டேன். எனக்கு சினிமாதான் எல்லாம் என்று கூறுகிறார் பிரியங்கா சோப்ரா.பாலிவுட்டின் அழகு நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. தனது நடிப்புலக அனுபவம், திரையுலக சவால்களை சமாளிக்கும் திறமை குறித்து அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.திரையுலகம் சற்று முரட்டுத்தனமானது, கரடு முரடானது. இதை சமாளிக்க தனி தைரியம், திறமை நிச்சயம் வேண்டும்.
தமிழ், தெலுங்கில் பிரபலமான ஒரு நடிகைக்கும், பிரபல கேரக்டர் நடிகர் ஒருவருக்கும் இணை பிரியாத நட்பு ஏற்பட்டு அது ஆழமாகியுள்ளதாம்.இருவரையும் அடிக்கடி ஹைதராபாத்தில் வைத்துப் பார்க்க முடிவதாகவும், இருவரின் நட்பும் வெகு ஆழமாகி வருவதாகவும் தெலுங்குத் திரையுலகில் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.இந்த நடிகை தமிழில்தான் பெரும்பாலும் நடிக்கிறார். ஆனால் இவரது தாராளமான கவர்ச்சியாலும், இவர் நடித்த படங்கள் தெலுங்கிலும்
திரைப்படங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதையும், ஆபாச உடைகளை அணிந்து நடிப்பதையும் கண்டித்து சென்னையில் மனித உரிமைகள் கழகத்தின் சார்பில் பெண்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ் சினிமாவில் ஆபாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உடை என்ற பெயரில், எதையாவது அரைகுறையாக போட்டுக் கொண்டு ஆபாசமான நடனங்களைப் புகுத்தி விடுகிறார்கள். கேட்டால், மக்கள் இதை ரசிக்கிறார்கள் என்று மக்கள்