ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் வீடு புகுந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை துணிச்சலுடன் தாக்கி ஒருவனை சுட்டு வீழ்த்திய வீரப் பெண் ருக்ஷானாவுக்கு தேசிய வீர விருது வழங்க வேண்டும் என மத்திய உள்துறைக்கு பரிந்துரைக்குமாறு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை ஆளுநர் என்.என்.வோரா கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து முதல்வருக்கு ஆளுநர்
ஜம்மு: லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுடன் மோதி ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றும், இன்னொரு தீவிரவாதியை காயப்படுத்தியும் சாதனை படைத்த ஜம்மு காஷ்மீர் பெண் ருக்ஷானாவுக்கு (19) சிறப்பு போலீஸ் அதிகாரி என்ற பதவி தரப்பட்டுள்ளது. இனிமேல் அவர் அதிகாரப்பூர்வமாக கையில் துப்பாக்கியை ஏந்தலாம்.அவர் மட்டும்லலாமல் அவரது சகோதரர், உறவினருக்கும் இதேபோன்ற பதவியை தந்துள்ளது ஜம்மு காஷ்மீர்
இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் சுட்டுக் கொன்றனர்.இம்பாலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த்ரோ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.அந்தப் பகுதியில், நேற்று நள்ளிரவில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர்களை தடுத்து
நியூயார்க்: தமிழர்களை நிர்வாணப்படுத்தி மிருகத்தனமாக இலங்கைப் படையினர் சுட்டுக் கொல்வது போன்ற காட்சி அடங்கிய வீடியோ உண்மையானதே என்று அமெரிக்காவைச் சேர்ந்த இன அழிப்புக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட தடவியல் சோதனையில் இது நிரூபிக்கப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,எங்கள் முதல் கட்ட அறிக்கையின்படி இந்த வீடியோ உண்மையானது என்று தெரிகிறது.
லக்னோ: உ.பி. மாவட்டம் கான்பூரில், விடுமுறை கொடுக்காததால் கோபமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், தனது மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். கொல்லப்பட்ட அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.கான்பூர் அருகே உள்ள பங்கி என்ற இடத்தில் கான்பூர் புரூப் ரேஞ்ச் உள்ளது. இங்குதான் கான்பூர் துப்பாக்கித் தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் சோதிக்கப்படும் என்புத குறிப்பிடத்தக்கது.இங்கு பாதுகாப்பு
டெல்லி: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய வெறித் தாக்குதலில் 17 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.நேற்று இந்த வெறிச் செயல் நடந்துள்ளது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மாவியோஸ்ட் தீவிரவாதிகள், சீருடையில், லாஹிரி என்ற கிராமத்திலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு போலீஸ் குழுவை கண்மூடித்தனமாக சுட்டனர்.கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த சண்டை
பாட்னா: பீகாரில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்ட நபர் அபாயச் சங்கிலியிபை பிடித்து இழுத்து தப்பி ஓடி விட்டார்.பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது.ஜாஜா - பாட்னா பாசஞ்சர் ரயில் நேற்று போய்க் கொண்டிருந்தது. அப்போது இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு நபர், தான்
சென்னை: சென்னை நீலாங்கரையில் ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் மற்றும் அவரது மனைவி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தனர்.கொலைச் செயலை நிகழ்த்திய நபரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.நேற்று மாலையில், சென்னையை அதிர வைத்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு...நீலாங்கரையை அடுத்த பனையூர் 11-வது
லால்கர்: மேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியினர் மீதான மாவோயிஸ்ட்கள் தாக்குதல் தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டுள்ளது. மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் இன்று சிபிஎம் தலைவர் ஒருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்று விட்டனர்.நேற்றுதான் பல்பஹாரி பகுதியில், ஒரு சிபிஎம் தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று லால்கர் பகுதியில், நிர்மல்மஹதோ என்ற சிபிம் தலைவரை மாவோயிஸ்டுகள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள காட்டுப் பகுதி வழியாக ஊடுறுவ முயன்ற நான்கு தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.குப்வாரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இன்று இந்த சம்பவம் நடந்தது. ஊடுறுவல்காரர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.பங்குஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதி வழியாக இவர்கள்