சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இன்பசேகரனை ஆதரித்து முதல்வர் கருணாநிதி வருகிற 24ம் தேதி பிரசாரம் செய்கிறார். பென்னாகரம் இடைத் தேர்தல் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய நான்கு முக்கியக் கட்சிகள் போட்டியிடுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக - பாமக இடையில்தான் மோதல் படு சூடாக
சென்னை: கர்நாடக அதிமுக முன்னாள் அவைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணராஜ் தலைமையில் கர்நாடக அதிமுக என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்துள்ளார்.இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை: மார்ச் 28-ந்தேதி பெங்களூர் மாநகராட்சிக்கு நடைபெற உள்ள தேர்தலில் சிவிக் ஃபிரண்ட் என்ற அமைப்புடன் இணைந்து அதிமுக போட்டியிடுவதாக
சென்னை: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் இட ஒதுக்கீட்டு முன்வடிவை ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்துடனும் அரிய வகையில் நிறைவேற்றிக் கொடுத்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளையும் நான் பாராட்டியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் எழுப்பப்பட்ட நாடாளுமன்றத்திலும், மாநில
சென்னை: புதிய சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தை வைக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனநாயக நெறிமுறைகளை அரசியலிலும், ஆட்சியிலும் கடைபிடித்து வருவதுடன், தமிழக மக்களின் தரம் உயர தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டிப் பணியாற்றி வருபவர் என்று
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சென்னை காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி ஆண்டு தோறும், அவர் பிறந்த மகம் நட்சத்திர நாளில், காளிகாம்பாள் கோவிலில் அதிமுக சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.18-வது ஆண்டாக இந்த ஆண்டில் திருவிளக்கு பூஜை நடத்த மாவட்ட செயலாளர் பி.கே. சேகர் பாபு எம்.எல்.ஏ.
சென்னை: திமுக பொதுக் குழுவில் பங்கேற்க இரு அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயர் ஆவுடைப்பட்டனிடம் அதிமுக மனு அளித்துள்ளது.அதிமுகவைச் சேர்ந்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராஜேந்திரனும் கோவில்பட்டி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணனும் சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தங்கள் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து
சென்னை: உச்சநீதிமன்றம் தடை பிறப்பித்திருந்த காரணத்தால்தான் எனது ஆட்சியில், 2004ம் ஆண்டு வரை கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்படாமல் இருந்தது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கரும்பு விவசாயிகளுக்கான ஆர்ப்பாட்டம் குறித்து 5.2.2010 அன்று நான் வெளியிட்ட அறிக்கையினை முழுவதுமாக படிக்காமல் ஓர் அறிக்கையை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார்.2004 ஆம் ஆண்டு
சென்னை: எனது பிறந்த நாளையொட்டி ஆடம்பரக் கொண்டாட்டங்கள் கூடாது, எளிமையாக கொண்டாட வேண்டும். என்னைப் பார்க்க சென்னைக்கு வர வேண்டாம். ஏழை மக்களுக்கு உதவிகளைச் செய்யுங்கள், ரத்ததானம், அன்னதானம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:அண்ணாவின் கூற்றுப்படி, ஆளும் கட்சியினால் மக்களுக்கு ஏற்படும் அவலங்களை, துன்பங்களை, துயரங்களை எதிர்க்கட்சித் தலைவர்
சென்னை: கரும்பு விவசாயிகள் தொடர்பாக விழுப்புரத்தில் நடந்த போராட்டத்தின்போது பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டியிருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதற்காக அவருக்கு அகில உலகப் புளுகு ராணி என்ற பட்டமே கொடுக்கலாம் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சரிந்து வரும் தனது செல்வாக்கை மீண்டும் சரி செய்து எப்படியாவது மீண்டும் முதல்-அமைச்சராகி
சென்னை: அதிமுகவிலிருந்து வரிசை கட்டி எம்.எல்.ஏக்கள் திமுக பக்கம் திரும்பிக் கொண்டிருப்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்த அனைவருக்கும் பொதுத் தேர்தலில் மீண்டும் சீட் தரப்படும் என ஜெயலலிதா உறுதி அளித்துள்ளாராம். அதிமுகவின் நிலை வர வர மிகப் பரிதாபமாகி வருகிறது. எம்.ஜி.ஆர். கட்சியா இது, திமுக தலைவர் கருணாநிதி பார்த்து நடுங்கிய அதிமுகவா இது என்று எல்லோரும்