சென்னை: பாஜகவிலிருந்து வருத்தத்தோடு விலகுகிறேன். அதே நேரத்தில் காங்கிரஸில் மகிழ்ச்சியோடு இணைகிறேன் என்றார் முன்னாள் மத்திய இணையமைச்சர் திருநாவுக்கரசர்.டெல்லியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் முதன்முறையாக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்.அவரை நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் காங்கிரசார் அவரை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.காங்கிரஸ்
சென்னை: பாஜகவில் பதவி சுகங்களை அனுபவித்து விட்டு, இப்போது இங்கு இருப்பதை விட காங்கிரசில் இருந்தால் வாழ்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றிருக்கிறார் திருநாவுக்கரசர் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.அவர் அளித்துள்ள பேட்டியில்,7 ஆண்டுகளாக திருநாவுக்கரசர் எங்களுடன் பணியாற்றினார். கட்சியில் அதிகபட்சமான மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது. கட்சியில் இணைந்தவுடன் அவருக்கு
டெல்லி: தமிழக பாஜக மூத்த தலைவரான திருநாவுக்கரசர் அந்தக் கட்சிக்கு முழுக்குப் போட்டு விட்டு இன்று காங்கிரசில் இணைந்தார். அத்தோடு தனது பாஜக ராஜ்யசபா எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார்.1977ம் ஆண்டு அதிமுக சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருநாவுக்கரசர். அவரை துணை சபாநாயகராக்கினார் எம்.ஜி.ஆர்.பினனர் அவரை வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் அமர
சென்னை: தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான எஸ்.திருநாவுக்கரசர் பாஜகவுக்கு முழுக்குப் போட்டு விட்டு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார். இதற்காக வருகிற 20ம் தேதி சோனியா காந்தியை திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசுகிறார்.1977-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருநாவுக்கரசர். அத் தேர்தலுக்குப் பின்னர் துணை சபாநாயகராக்கினார் எம்.ஜி.ஆர். அன்று முதல்
சென்னை: பாஜக அகில இந்தியச் செயலாளர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று தெரிகிறது.திருநாவுக்கரசரின் 61வது பிறந்த நாள் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்தது.அப்போது தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்த மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகளும், பாஜக மாநில பொதுச் செயலருமான தமிழிசையிடம் இதை மறைமுகமாகத் தெரிவித்தார் திருநாவுக்கரசர்.இதுவரை உங்களுடன் பணியாற்றினேன்.
சென்னை: நான் பாஜகவிலிருந்து வெளியேறப் போவதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கவிஞர் காசி முத்துமாணிக்கம் கூறியிருப்பது தவறான செய்தி என்று அக் கட்சியின் தேசியச் செயலாளரான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சரான திருநாவுக்கரசரை பாஜக மாநிலத் தலைவராக்க வேண்டும் என்று கோரியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் அவரது ஆதரவாளரான கவிஞர் காசி முத்துமாணிக்கம்.இதையடுத்து அவர் விடுத்த அறிக்கையில், பாஜகவிலிருந்து திருநாவுக்கரசரும்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளரான கவிஞர் காசி முத்துமாணிக்கும் பாஜகவிலிருந்து விலகியுள்ளார். திருநாவுக்கரசரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.திருநாவுக்கரசர், அதிமுகவிலிருந்து விலகி இரு முறை தனிக் கட்சி நடத்தியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் ஒருவர் காசி முத்துமாணிக்கம். பின்னர் திருநாவுக்கரசர் பாஜகவில் இணைந்தபோது அவருடன் சேர்ந்து இணைந்தார். இப்போதும்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடந்த பாஜக செயற் குழுக் கூட்டத்தை திருநாவுக்கரசரும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்த தரூணம் முதல் பாஜகவில் பயங்கர குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்காங்கே உட்கட்சி பூசல்களும் வெடித்துள்ளன. தேசிய அளவில் வெடித்த பூகம்பம் காரணமாக யஷ்வந்த் சிங் ராஜினாமா செய்தார்.தமிழகத்தில் பாஜகவின் மாநில பொது செயலாளர் திருநாவுக்கரசரும்
சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை அதன் அகில இந்தியச் செயலாளர் திருநாவுக்கரசர் புறக்கணித்தார். அவர் விரைவிலேயே பாஜகவில் இருந்து விலகுவார் என்று தெரிகிறது.மக்களவைத் தேர்தலில் சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன்
பரமக்குடி: நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை என பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பாஜக 12ல் போட்டியிடுகிறது. திருநாவுக்கரசர் ராமநாதபுரத்தில் களமிறங்குகிறார். இது குறி்த்து பரமக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,காங்கிரஸ் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு தீவிரவாதம், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி