திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று லட்சதீபம் ஏற்றப்பட்டது. மாசி மாதம் மஹா சிவராத்திரி நாளில் சிவபெருமான் அடிமுடி காண இயலாத ஜோதி பிழம்பாக, லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி தந்ததாக ஐதீகம்.இந்த வரலாறு நிகழ்ந்த இடமான திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும். நேற்று மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு காலை
திருவண்ணாமலை: சென்னையிலிருந்து சென்ற அரசு பஸ்சும், சென்னைக்கு வந்த அரசு பஸ்சும், திருவண்ணாமலை அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். சென்னையிலிருந்து இன்று காலை திருவண்ணாமலைக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதேபோல, சென்னையை நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.கீழ்பென்னாத்தூர் அடுத்து கோமாட்சிபாடி அருகே வந்த போது இரு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே திமுக பிரமுகருக்குச் சொந்தமான போலி சிமெண்ட் ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளு.திருவண்ணாமலை அருகே பெங்களூர் - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த போலி சிமெண்ட ஆலை இயங்கி வந்தது.இதையடுத்து சிமெண்ட் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் போலி சிமெண்ட் ஆலை குறித்து திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று திருவண்ணாமலை
திருவண்ணாமலை: திருவண்ணாலை அருணாச்சலேஸ்வரர் கோவில் யானை இறந்ததாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து பெண்கள் வீட்டின் முன்பு கோலம் போட்டு விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ருக்கு என்ற யானை உள்ளது. கோவில் திருவிழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின் போது நடைபெறும் சாமி ஊர்வலம், தேரோட்டம் ஆகியவற்றில் ருக்குதான் முன்னின்று நடத்தி செல்லும்
திருவண்ணாமலை: ஆதிதிராவிடர் காலனி அருகே சாமி ஊர்வலம் தீபாராதனைக்காக நிறுத்தப்படாததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதைத்தொடர்ந்து நடந்த சாலைமறியலில் ஊராட்சித் தலைவர் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம் கணணமங்கலம் அடுத்த அம்மாபாளையத்தில் மாரியம்மன் கோவிலில் காணும் பொங்கலையொட்டி நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் அம்மாபாளையம் ஆதிதிராவிடர் காலனி
திருவண்ணாமலை: தலித் மக்களுக்கு பஞ்சமி நிலங்களை தமிழக அரசு வரும் ஜனவரி 25ம் தேதிக்குள் மீட்டுக் கொடுக்காவிட்டால் ஜனவரி 26 ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என தலித் விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் தலித் விடுதலை இயக்கம் சார்பில் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் கதிர்காமன்
திருவண்ணாமலை: இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியி்ல் இந்திராகாந்தி பல்கலைக்கழகம் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அக் கட்சியின் எம்.பியான சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.திருவண்ணாமலையில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்றது.அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அங்கு தேர்தல் நடக்க உள்ளதால்
திருவண்ணாமலை: நகைக்கடை மேற்கூரையில் துளையிட்டு ரூ.70 லட்சம் மதிப்பிலான 4 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுளளனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவண்ணாமலை தேரடி வீதியில் வி.பி.சி.ஜூவல்லர்ஸ் நகைக்கடை நடத்தி வருபவர் சுமன். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமன் இரவு 8 மணியளவில் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.இன்று காலை 9 மணியளவில்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று மாலை மகா தீபம் எனப்படும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கி வழிபட்டனர்.அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். 10 நாள் நடைபெறும் திருவிழாவில் இங்குள்ள மலையே சிவனாக கருதி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.நாளை 2.668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றபடுகிறது. 11 நாட்கள் எரியும் இந்த தீபத்துக்கு 3500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். மகா தீபத்தையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு கோவிலில்