திருச்சி: மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருகின்றது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.திருச்சியில் சுகாதரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்நிருபர்களிடம் கூறியதாவது:கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவத் தொகையை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றது.பயனாளிகளுக்கு
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பினரும், அதன் ஆதரவாளர்களும் உலகம் தழுவிய பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.10க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நடவடிக்கைப் பிரசாரம் தொடங்கியுள்ளது. அன்லாக் தி கேம்ப்ஸ் என்ற பெயரில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு்ளது.கனடாவில் நம்பிக்கை வளையம், தெரு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மோதல் தொடர்பாக, அன்று பணியில் ஈடுபட்டிருந்த எந்த ஒரு காவலர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு காவலர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதில் மோதல் சம்பவத்துக்கு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவின் பதவியைப் பறிக்க வேண்டும் என நெருக்குதல் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து முதல்வர் கருணாநிதியின் கருத்தை அறிவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முதல்வரின் கருத்தை அறிந்து கொண்ட பின்னர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கவும் அது தீர்மானித்துள்ளது.ஸ்பெக்ட்ரம்
மதுரை: ரயில்களில் பட்டாசுகளைக் கொண்டு செல்லக் கூடாது. இதுபோன்ற வெடிபொருட்களை கொண்டு செல்வோர் வெடிபொருள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.சோழவந்தான் ரயில் நிலையத்தில் பட்டாசுகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த
டெல்லி: சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை உள்ளிட்டவற்றையும் மனித உரிமை மீறலாக அங்கீகரிக்கவுள்ளதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ளது. தற்போது ஜெனிவாவில் நடந்து வரும் ஐநாவின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. ஆனால், மனித உரிமைக் கவுன்சிலின் இந்த முடிவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாதி பிரச்சனைகளை சர்வதேச
சென்னை: இயக்குநர் சீமான் விடுதலைப் புலியாகவே செயல்பட்டு வருகிறார். அவரது பேட்டி இதை உறுதிப்படுத்துகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த தென் சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சபீர் அலி, நேற்று போலீஸ் கமிஷனர்
ஈரோடு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் துதிபாடுபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து ஈரோட்டில் அவர் கூறுகையில்,பெரியார் படத்துடன் தேசதுரோகி படத்தை இணைத்து வைத்துள்ளனர். துரோகிகள், தீவிரவாதிகள் அதிகரிப்பதை பெரியார் என்றும் விரும்ப மாட்டார். பிரபாகரனை பற்றி துதிபாடுபவர்கள், பொய் பிரசாரம் செய்பவர்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் சொத்து கணக்கை காட்டாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் புது‌ச்சே‌ரி முதல்வர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அ‌திமுக எம்எல்ஏ அ‌ன்பழகன் பேசுகையில்,புதுச்சேரியில் காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையில் உள்ள அதிகாரிகள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சா‌ட்டு எழுந்துள்ளது. அதனால் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் அனைவரும் சொத்துக் கணக்கை தாக்கல்
சென்னை: அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை வியாபாரிகள் வரம்பிற்கு அதிகமாக இருப்பு வைத்திருந்தால் பறிமுதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.விலை உயர்வை கட்டுப்படுத்துவது, உணவுப் பதுக்கலை ஒழிப்பது ஆகியவை குறித்து உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடந்தது.இதில் உணவுத் துறை முதன்மை செயலாளர் சண்முகம், உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராம்,