டெல்லி: கான்டிராக்ட் அடிப்படையில் மாதம் ரூ. 1 லட்சம் சம்பளத்திற்கு, 1500 நீதிபதிகளை நியமிக்க மத்திய அமைச்சவரை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, விசாரணை நீதிமன்றங்களில், ஒப்பந்த அடிப்படையில் 1,500 நீதிபதிகளை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவர்களுக்கு ரூ.1 லட்சம் மாத சம்பளம் அளிக்கப்படும். இவர்கள் 3 ஷிப்டுகளில் பணியாற்ற
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் 54 நீதிபதிகளும் தங்களது சொத்துக் கணக்கை பகிரங்கப்படுத்தியுள்ளனர். இந்த கணக்கு நீதிமன்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.இதில் தலைமை நீதிபதி எச்.எல்.கோகலேவுக்கு சொந்தமாக கார், வீட்டு மனை, விவசாய நிலம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் படிப்படியாக சொத்து விவரங்களை தெரிவித்து வருகின்றனர்.சமீபத்தில் நாமக்கல் கலெக்டர் சகாயம் தனது
டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் தவிர்த்த 4 நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.ஐந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உச்சநீதிமன்ற காலேஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் அவர்களில் ஒருவரான பி.டி.தினகரன் பெருமளவில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும், முறைகேடாக சொத்துக்களைக் குவித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 14 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் 54 இடங்களில் நீதிபதிகள் உள்ளனர். இதில் 26 பேர் நிரந்தர நீதிபதிகள் ஆவார்கள். கூடுதல் நீதிபதிகளாக இருந்த கே.சந்துரு, வி.ராமசுப்பிரமணியம், எஸ்.மணிக்குமார், ஏ.செல்வம், பி.ஆர்.சிவக்குமார், ஜி.ராஜசூர்யா, டி.சுதந்திரம், எஸ்.நாகமுத்து, எஸ்.பழனிவேல், கே.கே.சசிதரன், எம்.வேணுகோபால், வி.பெரியகருப்பையா,
சுவா: ஆஸ்திரேலிய, நியூசிலாந்து நாட்டுத் தூதர்கள் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பிஜி தீவு ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.பிஜி நாட்டின் உள் விவகாரங்களில் இந்த இரு நாடுகளும் தலையிடுவதாகக் கூறி இந்த உத்தரவைப் பிறப்பித்துளளார் அந் நாட்டு அதிபரான கமாண்டர் பிராங் பைனிமரமா.சில மாதங்களுக்கு முன் இவரது ஆட்சிக்கு எதிராக தீர்ப்பளித்த
டெல்லி: தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்பட 21 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை இணையத் தளத்தில் (http://www.supremecourtofindia.nic.in/assets.htm) வெளியிட்டுள்ளனர்.கடும் நெருக்கடிக்குப் பின்னர் இந்த விவரங்களை நீதிபதிகள் வெளியிட்டாலும் அவர்கள் சுயமாகவே இந்த விவரங்களை வெளியிட்டதாக உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் கூறுகிறது.தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள சொத்துப் பட்டியலில், அவருக்கு கேரளத்தின் எர்ணாகுளம் நகரில்
டெல்லி: நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் எழுந்து வருவதால், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.இதுதொடர்பாக சட்டத் திருத்தமும் கொண்டு வரப்படும் என்றார்.நிருபர்களிடம் பேசிய அவர்,நீதிபதிகள் மீது லஞ்சப் புகார்கள் அவ்வப்போது எழுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்
டெல்லி: நீண்ட சர்ச்சைகளுக்குப் பின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தங்களது சொத்து விவரங்களை வெளியிட ஒருவழியாக முன் வந்துள்ளனர்.இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.நீதிபதிகளும் சொத்துக் கணக்கை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கருத்து நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கை தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதிகள் முகோபாத்யாயா, சந்துரு ஆகியோர் தெரிவித்து விட்டனர்.பிப்ரவரி 9ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதில் போலீஸார், வக்கீல்கள் மீது தடியடி நடத்திக் கொடூரமாக நடந்து கொண்டதாக
சென்னை: தந்தை பெரியாரின் எழுத்துக்கள், சொற்பொழிவுகளை பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிடுவதற்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்த அனுமதிக்கு டிவிசன் பெஞ்ச் இடைக்காலத் தடை விதித்துள்ளது.சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் 1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், சொற்பொழிவுகளையும் தொகுத்து நூல்களாக வெளியிட