இந்த நவம்பர் மாதம் முழுக்கவே இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்காது என்றும் நிலையற்ற வர்த்தகம் காரணமாக சற்று இழப்புகளும் முதலீட்டாளர்களுக்கு நேரலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளது.17000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ் கடந்த இரு வாரங்களாக பெரும் ஊசலாட்டத்தில் உள்ளது. இதனால் மீண்டும் இறங்குமுகத்துக்குச் சென்ற சென்செக்ஸ், இப்போது 16000 புள்ளிகளுக்கும்
மும்பை: இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து நான்காம் நாளாக கரடியின் பிடியில் சிக்கியுள்ளது. இன்றும் வர்த்தகம் துவங்கியவுடன் 300 புள்ளிகள் வரை வீழ்ச்சியைச் சந்தித்தது சென்செக்ஸ். இதனால் 16000 புள்ளிகளுக்கும் கீழ் இறங்கியது சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 57 புள்ளிகள் குறைந்த 4769 புள்ளிகளாகக் குறைந்துவிட்டது. சர்வதேச பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்நது
மும்பை: மும்பை பங்கு வர்த்தகத்தில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிந்தது.நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 61.93 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 162.97 புள்ளிகள் சரிந்து 16,618.43 ஆக இருந்தது.ரியல் எஸ்டேட், ஐடி பிரிவு பங்குகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கியக் காரணம்.அதேபோல தேசிய பங்குச்
கிட்டத்தட்ட 16 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 5000 புள்ளிகள் என்ற குறியீட்டைத் தொட்டுள்ளது தேசிய பங்குச் சந்தையான நிப்டி. காலையில் வர்த்தகம் துவங்கியதும் சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்ந்து 16790-ஐக் கடந்தது. ஏசிசி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள், நல்ல லாபத்தில் கைமாறின. டாடா பவர் பங்குகள் 2.5 சதவிகித லாபத்தில் விற்பனையாகின. ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், எச்சிஎல்,
கொல்கத்தா: இந்தியாபுல்ஸ் செக்யூரிட்டிஸ் என்ற பங்கு வர்த்தக நிறுவனத்தின் துணைத் தலைவரான சித்தார்த் தாகா, ஆன்லைன் பங்கு வர்த்தக முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.கொல்கத்தாவைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவரின் ஆன்லைன் பங்கு வர்த்தக கணக்கில் புகுந்து முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து கொல்கத்தா காவல்துறையின் இணை ஆணையர் ஜாவேத் ஷமீம் கூறுகையில், அருணவா சக்கரவர்த்தி
டெல்லி: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஜூலை 17-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 227 கோடி டாலர் (சுமார் ரூ.10,896 கோடி) அதிகரித்து, 26,618.70 கோடி டாலராக (ரூ.12,77,698 கோடி) உயர்ந்துள்ளது. இதற்கும் முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 26,391.70 கோடி டாலராக இருந்தது.அதற்கு முந்தைய இரு வாரங்களில் அன்னியச் செலாவணி கையிருப்பு
மும்பை: வாரத்தின் முதல்நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தையில் பரபரப்பான வர்த்தகம் நடந்து வருகிறது. குறிப்பாக ஐடி துறை சார்ந்த பங்குகளில் இன்று லாபம் கொட்டுகிறது என்றால் மிகையல்ல.வர்த்தகம் துவங்கியபோதே 220 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இப்போது 320 புள்ளிகள் உயர்வுடன் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதன்மூலம் மீண்டும் 15000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது சென்செக்ஸ்.இந்த துறை பங்குகள்
மும்பை: கடந்த ஒரு வாரத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் மொத்தம் ரூ.1,73,000 கோடியை இழந்துள்ளன. குறிப்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த நிறுவனப் பங்குகளால் ஏற்பட்டுள்ள நஷ்டம் மட்டும் ரூ.38,985 கோடி. பங்குப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட விலை சரிவு காரணமாக பெரும் நஷ்டத்தைச் சந்தித்த
லண்டன்: ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றிக் காய்ச்சலால் உலக பங்குச் சந்தைகள் பெரும் சரிவுக்கு உள்ளாகியுள்ளன. வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்சத்தில் பயணிகள் விமானப் பயணத்தைத் தவிர்ப்பதால், விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளன. மெக்ஸி்கோவுக்கு அடுத்தபடியாக நியூஸிலாந்திலும் இந்த நோய் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், சர்வதேச அளவில் பெரும் அச்சம் பீடித்துள்ளது. இன்று டாவ் ஜோன்ஸில்
டெல்லி: வரும் 2025-ம் ஆண்டு இந்திய பங்குச் சந்தைக் குறியீட்டெண் சென்செக்ஸ் 1,00,000 புள்ளிகளை எட்டிவிடும் என்று அமெரிக்காவின் எலியட் வேவ் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. சென்செக்ஸின் முந்தைய போக்கு, நடப்பு நிலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த புள்ளிவிவரக் கணக்கை தயாரித்து வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி சென்செக்ஸ் 21000 புள்ளிகளைத்