சென்னை:அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. வரும் காலங்களிலும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்..சென்னை, லாயிட்ஸ் சாலையிலுள்ள அதிமுக தலைமையகம் வந்த ஜெயலலிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:கேள்வி: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா?ஜெயலலிதா: இடைத் தேர்தல்களில் அதிமுக போட்டியிடும்.கேள்வி: கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை.
சென்னை: சரக்குக் கப்பலில் அணு பொருள் இருப்பதாக தொலைபேசியில் வந்த தகவல் வதந்தி. வதந்தி கிளப்பிய நபரை தேடி வருகிறோம் என்று சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.விசாகப்பட்டனத்திலிருந்து சென்னை வந்த எம்.வி.கார்லேன்ட் என்ற சரக்குக் கப்பலில் கதிர்வீச்சுத் தன்மையுடைய பொருள் இருப்பதாக சென்னை பொறுப்புக் கழகத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. உனடியாக அந்தக் கப்பல்
டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல்வாதிகள் விளையாடி வருவதாக விமானப் படைத் துணைத் தலைவர் பி.கே.பர்போரா குற்றம் சாட்டியுள்ளார்.இந்திய விமானப் படையின் நம்பர் டூ நிலையில் உள்ள பிரணாப் குமார் பர்போரா, இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் (சிஐஐ) மாநாட்டில் பேசுகையில்,நம் முப்படைகளின் பலத்தை அதிகரித்தாக வேண்டும். இதைச் செய்ய வேண்டியது அரசும் அதிகாரவர்க்கமும் தான். ஆனால், அரசியல்வாதிகளின்
சபரிமலை: சபரி்மலை ஐயப்பன் கோவில் பாதுகாப்புக்காக கூடுதலாக 2 கம்பெனி போலீசார் வந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அதிக அளவு பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலையில் பக்தர்கள் போல் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற
வள்ளியூர்: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் ரஷ்யா நாட்டு உதவியுடன் சுமார் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை: கோவையில் புதிய தமிழகம் சார்பில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.இலங்கைத் தமிழர் உட்பட உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு கோவை வ.ஊ.சி திடலில் வரும் பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக்
அகமதாபாத்: பாதுகாப்பு கருதி, இரவு நேரங்களில் கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்லக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.அகமதாபாத்தில் இந்தியா, இலங்க இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.இரு அணி வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியினருக்கு மிரட்டல் இருப்பதாக கொழும்பிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தினர், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குத் தகவல்
தவாங் (அருணாச்சல் பிரதேசம்): அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் தனது பயணத்தை நாளை முதல் தொடங்குகிறார் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா. இதையடுத்து தலாய் லாமாவை வரவேற்க தவாங் பகுதி மக்கள் பெரும் ஆவலோடு காத்துள்ளனர்.பனி படர்ந்த மலைகளுக்கு நடுவில், கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள பகுதிதான் தவாங். அருணாச்சல் பிரதேசத்தின் முக்கியப்
சென்னை: கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறு செய்து வருவதால் அணையின் பாதுகாப்புக்கு சிஐஎஸ்எப் படையினரை நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு இடையூறு செய்து வருகிறது.தமிழகத்தின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது
புவனேஸ்வர்: ஒரி்ஸ்ஸா மாநிலம் சண்டிபூரில் வீலர்ஸ் தீவில் உள்ள இந்திய ராணுவத்தின் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ராணுவ வீரர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.ஏவுகணைகளி்ல் பொறுத்த வேணடிய வெடிகுண்டுகளை வாகனங்களில் ஏற்றியபோது அவை வெடித்துச் சிதறியதில் இந்த விபத்து நடந்துள்ளது.நேற்று மாலை நடந்த இந்த விபத்தில் ஏ.கே.சுக்லா என்ற ராணுவ வீரர் பலியானார்.