திண்டுக்கல்: திருமண ஆசை காட்டி காதலியை ஏமாற்றியவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (30). இதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (21) . இவர்கள் இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக மனம் உருகி காதலித்து வந்துள்ளனர். உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் கருணாநிதி தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற காவல்துறையினர்- வழக்கறிஞர்கள் மோதலை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,''வழக்கறிஞர்கள் வேட்டை என்ற போர்வையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும்
மணப்பாறை: விபத்தில் சிக்கிய லாரி டிரைவருக்கு ஜாமீன் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ கைது செய்யப்பட்டார்.மணப்பாறையில் கடந்த 16ம் தேதி மின்வாரிய ஊழியர் கிருஷ்ணன், லாரி டிரைவர் ஆறுமுகம் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டன. இதில் கிருஷ்ணன் படுகாயமடைந்தார்.இந்த விபத்து தொடர்பாக ஆறுமுகம் மீது வழக்கு போடப்பட்டது. அவரை ஜாமீனில் விட மணப்பாறை
சென்னை: திருத்துறைப்பூண்டி கோயிலில் திருடுபோன ரூ.50 கோடி மதிப்புள்ள மரகதலிங்க சிலையை மீட்ட தமிழக காவல்துறைக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருத்துறைப்பூண்டி திருக்கோயிலில் திருடு போன பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு, திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதை விரைந்து கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகளுக்கும், பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபி
லாகூர்: தற்கொலைப் படையினர் உள்ளிட்டோருடன் லாகூரில் புகுந்த தீவிரவாதிகள் அங்கு நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 3 இடங்களில் நடந்த இந்த பயங்கரத் தாக்குதலால் லாகூர் நகரம் ஸ்தம்பித்துப் போனது.போலீஸாரைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தீவிரவாதத் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.பயங்கர ஆயுதங்களோடு இன்று காலை லாகூருக்குள் புகுந்த தீவிரவாதிகள்,
சேலம்& சென்னை: மேட்டூரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய போலீஸ் ஏட்டு மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.இந்த ஏட்டு தனது வீட்டிலேயே பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளார். இதையடுத்து மேட்டூர் காவிரி நகரில் உள்ள அவரது வீட்டில் ரெய்ட் நடத்திய போலீசார் 20 வயது பெண் மற்றும் புரோக்கரை கைது செய்தனர்.போலீசார் வருவது தெரிந்து
சென்னை: தமிழகம் முழுவதும் கோவில் நுழைவுப் போராட்டத்தின் போது போலீசாருடன் நடந்த மோதல் குறித்து தனது கட்சியி்ன் மூத்த தலைவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் ஆலோசனை நடத்தினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் வட சென்னையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடந்தது.இதில் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர்
சென்னை: சென்னை அசோக்நகரில் தாயும் மகனும் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாருக்கு 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதில் ஒரு நபர் தலைமறைவாக உள்ளதால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.சென்னை மேற்கு மாம்பலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த அனந்த லட்சுமி (39) மற்றும் அவரது மகன் சூரஜ் (12) ஆகியோர் கடந்த 24ம் தேதி வீட்டில்
சென்னை: சென்னையில் பொது இடங்களில் காற்றாடி பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்,சென்னையில் மாஞ்சா நூலுடன் காற்றாடி பறக்கவிடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் சூழல்கள் உருவாகின்றன.இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களின் கழுத்தில் காற்றாடி நூல் சிக்கி, கழுத்து அறுபடுவது உள்ளிட்ட விபத்துகள் நடக்கின்றன.மேலும், அறுந்து விழும் காற்றாடியை பிடிக்க
சென்னை: அரசின் லட்சியங்கள் நிறைவேற அரசுக்கும், மக்களுக்கும் இடையே கண்களாகவும், காதுகளாகவும் கலெக்டர்களும், காவல்துறை அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசுகையில்,தமிழக கடலோரப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து அகதிகள் என்ற போர்வையில் விரும்பத்தகாத