ராசிபுரம்: மல்லூர் அருகே அரசு டவுன் பஸ், மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில், பள்ளி மாணவர்கள் இருவர் பலியாயினர். 35 பேர் படுகாயமடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், மலையாம்பாளையம் அருகே குறுகிய சாலை வழியாக சென்றது. அப்போது, பஸ் வளைவில் திரும்பிய போது, அங்கிருந்த மின் கம்பத்தில்
ஈரோடு: ஈரோடு அருகே குடித்து விட்டு மாணவர்களிடம் தகராறு செய்த இரு போலீஸ்காரர்களை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.பெருந்துறை காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் மேகநாதன். இதேபோல சித்தோடு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருப்பவர் ஞானசேகரன். இருவரும் சீருடை இல்லாமல், குடித்து விட்டு போதையில் நடந்து வந்தனர். வெள்ளோடு பகுதிக்கு
நெல்லை: சுரண்டை அருகே மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்ததாக பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து குழந்தைகளை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே கேஎம் அச்சம்பட்டியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ,
மதுரை: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டத் துடிக்கும் கேரள அரசைக் கண்டித்து, கேரள முதல்வர் அச்சுதானந்தனின் கொடும்பாவியை எரித்து மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.மதுரையில், மாவட்ட கோர்ட் முன்பு தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த 15 மாணவர்கள் கூடினர். கேரள அரசு புதிய அணை கட்ட முயல்வதைக் கண்டித்து கோஷமிட்டனர்.
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நான்கு சர்வதேச கல்லூரிகள் திடீரென மூடப்பட்டு விட்டன. இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட 2000 சர்வதேச மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இன்னனும் சில வாரங்களில் இறுதியாண்டுத் தேர்வை எழுதவிருந்த நிலையில் இக்கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பல மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் இந்த கல்லூரிகள் உள்ளன. நான்கும் தனியார் கல்லூரிகள் ஆகும்.மெரிடியன் குரூப் நடத்தும்
வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில், கடந்த செப்டம்பர் மாதம் ஜூனியர் மாணவர்களிடம் ராகிங் செய்தும், கல்லூரி விடுதியை சூறையாடியும் அக்கிரமம் செய்த 28 சீனியர் மாணவர்கள் கல்லூரியை விட்டு அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியில் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி, ராகிங் செய்ததை கல்லூரி முதல்வரிடம் சொல்லியதற்காக முதலாமாண்டு படித்த மாணவர்களை,
மலப்புரம்: கேரளத்தின் மலப்புரம் மாவட்டம், ஹரிகோடாவில் உள்ள சாளியாற்றில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்கள் அனைவரும் 8 முதல் 15 வயது சிறுவர்கள். விபத்துக்குள்ளான படகில் மொத்தம் 40 பேர் இருந்துள்ளனர்.ஹரிகோடாவிலிருமந்து சாளியாற்றின் வழியாக அருகில் உள்ள ஊருக்கு இவர்கள் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சமீபத்தில் தான் தேக்கடியில்
சேலம்: சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் நடந்ததையடுத்து கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டு்ள்ளது.சேலம் கோரிமேட்டில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இடையே நேற்று முன் தினம் நள்ளிரவில் நடுரோட்டில் சண்டை நடந்தது.வீச்சரிவாள்களால் இரு தரப்பினரும் வெட்டிக் கொண்டதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.மாணவர்கள் மோதிக் கொண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அங்கு ராகிங் பிரச்சனை
சேலம்: சேலத்தில் தனியார் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் நள்ளிரவில் வீச்சரிவாள்களால் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.சேலம் கோரிமேடு அருகே உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த விக்னேஸ்வரராஜ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சதீஷ். இவர் 2ம் ஆண்டு படிக்கிறார். நேற்றிரவு இவர்கள் டீ சாப்பிட ஏற்காடு மெயின்
நாகர்கோவில்: நெல்லை பொறியியல் கல்லூரியில் உடன் பயிலும் மாணவனைக் கொல்ல கேரள மாணவர்கள் தீட்டிய சதி அம்பலமானது. போலீஸ் சோதனையில் அரிவாள், கத்திகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அங்குள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர்.அப்போது அவர்கள், நமது கல்லூரி கேன்டீன்