கொழும்பு: அரசு வீட்டை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் காலி செய்து விட வேண்டும் என சரத் பொன்சேகாவுக்கு ராஜபக்சே அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் தான் திண்டாடி வருவதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.இலங்கை கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டார் பொன்சேகா. அவரை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து விட்டது ராஜபக்சே அரசு.இந்த நிலையில் அவர்
டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமித்த நிலப் பகுதிக்குள் செல்ல விடாமல் போலீஸார் தங்களைத் தடுப்பதாகவும், பல்வேறு வழக்குகளைப் போடுவதாகவும், மிரட்டுவதாகவும் கூறி திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து தலித் சமுதாயத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.காவேரிராஜபுரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வைத்துள்ளார் தினகரன். இவற்றில் அரசு புறம்போக்கு நிலமும்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு, தனுஷ்கோடி இடையே மீன் பிடிக்க வந்தால் சுட்டுக் கொன்று விடுவோம் என இலங்கை கடற்படை காடையர்கள் மிரட்டியதாக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.இதுகுறித்து நேற்று மீனவர்கள் சார்பில் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தரப்பட்டது.அதில், நாங்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையிலான பகுதியில் இருந்தபோது அங்கு ஆறு படகுகளில் இலங்கைக் கடற்படையினர்
தவாங்: அருணாசலப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் தலாய் லாமாவுக்கு மத்திய அரசு திடீரென புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவருடன் வந்துள்ள நிருபர்களை உடனே அங்கிருந்து வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.1962ம் ஆண்டு போரில் இந்தியாவுக்கு பலத்த அடி தந்ததை நினாவூட்டி சீனா விடுத்த மிரட்டலையடுத்தே மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.மதத் தலைவர்களின் சுற்றுப் பயணத்தில்
டெல்லி: இந்த நாடு இன்னொரு முறை பிளவுபட்டால் அதற்கு ராஜ் தாக்கரே போன்ற சக்திகள் தான் காரணமாக இருப்பார்கள் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் காட்டமாகக் கூறினார்.இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்காக மகாராஷ்டிர சட்டசபையில் சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ அபு ஆஸ்மி ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா
ஆக்ரா: தலிபான்களிடமிருந்து எத்தகைய சவால் விடப்பட்டாலும் அதை சந்திக்க இந்திய பாதுகாப்புப் படையினர் தயாராக உள்ளனர் என்று ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூர் தெரிவித்துள்ளார்.இருப்பினும் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் முறைகள் அப்பாவிகளின் உயிரைப் பறிக்கும் வகையில் இருப்பது மட்டுமே தங்களைக் கவலைப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.ஆக்ரா வந்த தீபக் கபூர் இதுகுறித்துக் கூறுகையில், தலிபான்களை சந்திக்கவும், சமாளிக்கவும்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மாவோயிஸ்ட் நக்ஸலைட்டுகளின் மிரட்டல் காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நக்ஸல்களை ஒடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் ப.சிதம்பரம் உள்பட மூத்த தலைவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உளவுத் துறை பரிந்துரைத்துள்ளது. டெல்லியில் ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு
செங்கல்பட்டு: தீபாவளி விடுமுறையை நீட்டிக்கச் செய்ய பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செங்கல்பட்டு வேதாசல நகரில் உள்ளது ராமகிருஷ்ணா மிஷனரி மேல்நிலைப்பள்ளி. தீபாவளி பண்டிகைக்காக 16ம் தேதியில் இருந்து 18ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இது தொடர்பாக அறிவிப்பும் எழுதப்பட்டு நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. ஆனால், யாரோ
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மேலும் ஒரு சிக்கல் அவருக்கு எழுந்துள்ளது.தமிழகத்தைச் சேர்ந்தவரான பி.டி.தினகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 ஆண்டுகள் நீதிபதியாக பதவி வகித்தார். இதையடுத்து 2008ம் ஆண்டு அவர் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிகக்ப்பட்டார்.சமீபத்தில், பி.டி.தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்குவதற்கான பரிந்துரையை நீதிபதிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான
நாகப்பட்டிணம்: நாகப்பட்டிணம் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தபால்மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.நாகப்பட்டிணம் காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர் மகேஷ்வர் தயாள். இவருக்கு இன்று தபாலில் ஒரு பார்சலும், கடிதமும் வந்தது.அந்த கடிதத்தை பிரித்து பார்த்த போது அதில், பார்சலை கவனத்துடன் பிரிக்கவும் அதில் வெடிகுண்டு இருக்கிறது. ‌மேலும் கடல் வழியாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் ஊடுருவியுள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.