சென்னை: பிரமிட் சாய்மிரா (PSTL) நிறுவனத்தை 7 ஆண்டுகள் பங்கு வர்த்தகத்திலிருந்து தடை செய்துள்ளது பங்குகள் பரிவர்த்தனை மையமான செபி. இதனால் இந்நிறுவனப் பங்குகள் இனி பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாது.இந்நிறுவனம் பங்கு ஒதுக்கீடு செய்ததில் காணப்பட்ட முறைகேடுகளைக் கண்டறிந்த செபி, அதன் அடிப்படையில் இத் தடையை விதித்துள்ளது. 2006-ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியீட்டில்
வீட்டு வசதி வாரிய இடத்தை நடிகர் விஜய் வாங்கியதில் நடந்துள்ள முறைகேடு விவகாரத்தில் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த கார்வண்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தங்களது நிலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் நடிகர் விஜய்க்கு முறைகேடாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீட்டு தருமாறும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு
டெல்லி: "2-ஜி அலைக்கற்றை உரிமம் (ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்) வழங்கியதில், அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலில் வந்தவர்களுக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில், ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் மத்திய தகவல் தொடர்புத் துறை அதிகாரிகள் மிகக் குறைந்த விலையில்
டெல்லி: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா என்பதை நிரூபிப்பதற்காக பாமக குழு டெல்லி வந்துள்ளது. நேற்று தேர்தல் ஆணையர்கள் முன்பு தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். செப்டம்பர் 7ம் தேதி மோசடி செய்ய முடியுமா என்பதை நிரூபிக்குமாறு அவர்களுக்கு தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளித்துள்ளது.மின்னணு எந்திரங்களில்
சென்னை: விலைவாசி வெகுவாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருலான பாலுக்கு விதிக்கப்பட்ட விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திமுக அரசு முதல் முறையாக 6.3.2007 அன்று பாலின் விலை லிட்டருக்கு ரூ. 1.25 வீதம், ரூ. 12.59ல்
ஹைதராபாத்: திருப்பதி கோவிலில் விஐபி டிக்கெட்டுகள் வழங்குவதில் முறைகேடு செய்த ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியாவின் பணக்கார கடவுளான திருப்பதி வெங்கடசேபெருமானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து விஐபிக்களுக்கு ரூ. 500க்கு விசேஷ விரைவு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சமீபகாலமாக இதில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக திருப்பதி திருமலை தேவஸ்தான
வேலூர்: மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நடுநிலையான பொறியாளர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுனர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவின் முன் நிரூபிக்க தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு பாமக பதில் கடிதம் அனுப்பியுள்ளது.இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அக் கட்சி கூறியுள்ளது.இது குறித்து வேலூரில் அக் கட்சியின்
கரூர்: கரூரில் ரூ.83 லட்சம் மோசடி தொடர்பாக தொழிலதிபரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூர் வையாபுரிநகரைச் சேர்ந்த பழனிசாமி மகன் ஸ்ரீசரவணன் (33). இவர், அதே பகுதியில் ஒரு ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார்.இவரிடம் இந்திய தொழில் கூட்டமைப்பு துணைத் தலைவர் டி.எஸ். விஜி என்பவர் வெளிநாட்டில் ஜவுளி ஏற்றுமதி உத்தரவு வாங்கித் தருவதாக கூறி
சென்னை: மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதால் அது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்ட வேண்டும் என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.நிருபர்களிடம் அவர் பேசுகையில்,இலங்கையில் உள்ள முகாம்களில் 2.8 லட்சம் தமிழர்கள் அடைபட்டுள்ளனர். இவர்களில் 50,000 பேர் குழந்தைகள். அந்த முகாம்கள் எப்படி இருக்கின்றன என்று உலக
சென்னை: மின்னணு வாககுப் பதிவு எந்திரங்களில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.சட்டசபையில் பொதுத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் கருணாநிதியின் சார்பில் அமைச்சர் அன்பழகன் பதில் அளித்தார். அவர் கூறுகையில்,கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியல் சரியில்லை, பல பெயர்கள் விடுபட்டுவிட்டன என்று கூறப்பட்டது.