கொழும்பு: தங்களது பெயர்களுக்குப் பின்னால் ராஜபக்சே என போட்டுக் கொள்ள சிங்களர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனராம். இதனால் பெயர் மாற்றத்தைப் பதிவு செய்ய பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் அலை மோதுகிறதாம்.ஈழப் போரின் முடிவைத் தொடர்ந்து சிங்களர்கள் மத்தியில் ஹீரோவாகி விட்டார் ராஜபக்சே. இந்தப் போரின் வெற்றி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைப் புதைத்து விட்டு கிடைத்தது என்பதை
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், 1000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது இலங்கை மத்திய வங்கி. இதில் ராஜபக்சே மற்றும் ராணுவத்தினர் படம் இடம் பெற்றுளளது.நான்காவது ஈழப் போர் எனப்படும் ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போரில் பல்வேறு நாட்டு உதவியுடன் விடுதலைப் புலிகளை வீழ்த்தியது இலங்கை அரசு.இதைப் பாராட்டும் வகையிலும்,
கொழும்பு: விரைவில் அதிபர் தேர்தலை ராஜபக்சே அறிவிக்கலாம் எனத் தெரிகிறது. கட்சி நிர்வாகிகளிடம் பிரசாரத்தைத் தொடங்குமாறு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளாராம்.இலங்கை அரசியல் சட்டப்படி, ஒரு அதிபர் தனது பதவிக் காலத்தில் நான்கு ஆண்டுகளை முடித்த பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும். ராஜபக்சே நாளையுடன் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்கிறார். இதையடுத்து எப்போது வேண்டுமானாலும்
கொழும்பு: அதிபர் தேர்தல் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என ராஜபக்சே அறிவித்து விட்டார். பொன்சேகா பீதி காரணமாகவே இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளதாக தெரிகிறது.அதிபர் தேர்தலை சற்று தள்ளிவைத்து விட்டு அதற்கு இடைப்பட்ட காலத்தில் பொன்சேகாவின் பெயரை பெரிய அளவுக்கு டேமேஜாக்க அவர் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இலங்கை அதிபர் தேர்தலை ராஜபக்சே முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
கொழும்பு: 2 நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அதுகுறித்து இலங்கை அரசுத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த செய்தி அறிக்கையும் தரப்படவில்லை. நேற்று முன்தினம் திடீரென இலங்கை கிளம்பிச் சென்றார் பிரணாப் முகர்ஜி. முதலில் லட்சுமண் கதிர்காமர் நினைவு சொற்பொழிவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது
கொழும்பு: சரத் பொன்சேகாவுக்கு உடனடியாக ஓய்வு அளிக்க அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நாளையே அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சியை நடத்தி விடை கொடுக்கவுள்ளது இலங்கை ராணுவம்.இலங்கை கூட்டுப் படைத் தலைவராக இருந்து வந்த பொன்சேகா அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்து கடிதம் கொடுத்தார். இந்தக் கடிதத்தைப் பரிசீலித்த ராஜபக்சே டிசம்பர் 1ம் தேதியுடன் அவருக்கு ஓய்வளிக்க முதலில்
சென்னை: இலங்கையில் ராணுவத் தாக்குதலில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்க கோரியும் அதை கேட்க மறுத்த இந்திய அரசு இப்போது ராஜபக்சேவைக் காக்க துடிப்பது ஏன் என்று கேட்டுள்ளார் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தனது ஆட்சியைக் காப்பாற்ற இந்தியப் படையை அனுப்புமாறு
டெல்லி: இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக சூறாவளிப் புயல் வலுப்பெற்று வரும் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், அவசர அவசரமாக, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை இன்று கொழும்புக்கு அனுப்பி வைத்தார்.இலங்கை செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் வந்த அவரை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி சொல்லியனுப்பி விவரங்களைப் பகிர்ந்து
கொழும்பு: இலங்கையில் ராணுவப் புரட்சியை மேற்கொள்ள நான் திட்டமிட்டு்ள்ளதாகக் கூறி அதை சமாளிக்க இந்திய ராணுவத்தின் உதவியை அதிபர் ராஜபக்சே கோரியுள்ளார். இதைவிட அசிங்கமான செயல் எதுவும் இருக்க முடியாது என்பதால் தான் நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன் என்று அந் நாட்டு முப்படைகளின் கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய சரத் பொன்சேகா கூறியுள்ளார்.நேற்று
டெல்லி: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் பயணமாக கொழும்பு செல்கிறார்.அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிடப் போவதாக செய்திகள் வரும் நிலையில், தீவிரமான சீன-பாகிஸ்தான் ஆதரவாளரான பொன்சேகா இலங்கை அதிபராவது நல்லதல்ல என்று இந்தியா கருதுகிறது.இந் நிலையில் பிரணாப் இலங்கை செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரணாப்பின் பயணம் ராஜபக்சேவுக்கு உறுதுணையாக