திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் நவம்பர் 14ம் தேதி அன்று முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான சீனிவாசராவ் நினைவு மணிமண்டபத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு உள்ள உரிமைகளை பெற்றுத்தர பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் சீனிவாசராவ். அவர் இறந்த பின்பு, அவருக்கு திருத்துறைப்பூண்டியிலேயே நினைவிடம் அமைக்கப்பட்டது.அரசு சார்பில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்
வேலூர்: ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்ட முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் 100 வீடுகள் கொண்ட சமத்துவப்புரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நேற்று திறந்து வைத்தார்.இந்த விழாவில் பேசிய துரைமுருகன்,ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு
சென்னை: அப்பல்லோ குழும மருத்துவமனைகளின் மருத்துவ சேவையை கெளவுரவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி சாந்தா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.சிறப்பு தபால்தலை தொகுப்பை மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஏ.ராசா வெளியிட, முதல் பிரதியை
சென்னை: இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசனை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். சமீபத்தில் கணேசனுக்கு இதய அறுவை சிகி்ச்சை நடந்தது. அவர் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.இந் நிலையில் இன்று காலை இல.கணேசன் வீட்டுக்கு அமைச்சர் பொன்முடியுடன் சென்ற ஸ்டாலின் நலம் விசாரித்தார்.முதல்வர்
தென்காசி: திமுக அரசு பாலம் கட்டுகிறது. அதிமுக ஆட்சியில் அது இடிக்கப்படுகிறது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தென்காசியில் ரயில்வே மேம்பாலம், ஏர்வாடி, ஆசாத் நகர் உள்பட உயர்மட்ட பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு சபாநாயகர்
குற்றாலம்: நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவின்போது பத்திரிக்கையாளர்களை அப்புறப்படுத்துமாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதைத் தொடர்ந்து அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் ஸ்டாலின் நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறினர்.இன்று காலை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றாலம் வந்தார். அங்குள்ள கலைவாணர் அரங்கில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சிக்காக பத்திரிக்கையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் பெருமளவில்
நெல்லை: துணை முதல்வர் ஸ்டாலினை வரவேற்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை மர்ம கும்பல் ஒன்று கிழித்து தீ வைத்தது.தென் மாநிலங்களுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை நெல்லை வருகிறார். அவர் நாளையும், 14ம் தேதியும் நெல்லை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு சிலை, மேம்பாலம் மற்றும்
சென்னை: தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நாளை விருதுநகர் வருகிறார்.இது குறித்து துணை முதல்வரின் உதவியாளர் க.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கை..துணை முதல்வர் நாளை 12.10.09ம் தேதி விருதுநகர் செல்கிறார். மாலை 4 மணிக்கு துலுக்கப்பட்டியில் இருக்கும் திமுக இளைஞரணி விழாவில் கலந்து கொண்டு
திருநெல்வேலி: ராதாபுரம் பேருந்து நிலைய பிரச்சனைக்கு துணை முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பேருந்து நிலையத்துக்கு முதல்வரின் பெற்றோர் பெயரும், அங்கிருக்கும் வணிக வளாகத்திற்கு காமராஜர் பெயரும் சூட்டப்படும் என தெரிவித்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் ரூ.2.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம், ரூ. 71 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றை துணை முதல்வர்
நாமக்கல்: சதிக்கு கால் முளைத்து சாதியாகி விட்டது என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் ஒன்றியம் அகரம் ஊராட்சியில் துணை முதல்வர் ஸ்டாலின், சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் மகளிர் சுய உதவி குழுவினரின் கண்காட்சியி்ல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சமத்துவபுரம் திறப்பு விழா சிறப்பாக, எழுச்சியோடு நடந்து வருகிறது.