ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் படப்பிடிப்புக்கு பெருமளவில் ரசிகர்கள் திரண்டு வந்ததால் போக்குவரத்து பாதித்து மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.சென்னை அருகே உள்ள மதுரவாயல் பகுதியில் பிரமாண்ட உள்வட்டச் சாலை மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பாலத்தில் வைத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்க விரும்பியுள்ளார் எந்திரன் பட இயக்குநர் ஷங்கர்.இதையடுத்து கடந்த 3 நாட்களாக
நெல்லை: தொடர் மழையால் தேங்கி கிடக்கும் நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் நெல்லை மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் பல இடங்களிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. பல பகுதிகளில் கழிவு
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நகர்ந்து தற்போது லட்சத்தீவுப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி முனைப் பகுதியில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று உருவாகியது. இதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் உட்புறப்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் நாகை கடல் பகுதியில் கடும் கொந்தளிப்பு காணப்படுகிறது. பலத்த வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசுவதால் மீனவர்கள் பீதி அடைந்துள்ளனர்.16 நாட்களாக வேலைநிறுத்தம் முடித்து வேலைக்கு திரும்ப நினைத்த மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் நேற்றும் தொடர்ந்து 2வது நாட்களாக பலத்த சூறாவளி வீசியது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன்
கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று கடும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் நகரமே ஸ்தம்பித்தது. முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி, லிப்ட் இல்லாமல் மாடிப் படியேறி செல்லும் நிலை ஏற்பட்டது.கொல்கத்தாவில் நேற்று காலை தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள மஹேஸ்தலா என்ற இடத்தில் மின் விநியோக வயர் அறுந்து போனது. இனால் 635 மெகாவாட் மின்சாரம் விநியோகம் இல்லாமல் துண்டிக்கப்பட்டது.இதையடுத்து
நாகப்பட்டினம்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற, அவசரகால ஊர்திகள் (108) வழங்கும் விழாவில் கலந்து கொண்டு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது...தமிழகத்தில், பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்குதல் இருக்குமோ? என்ற அச்சத்தின் காரணமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை
சென்னை: தென் சென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் பெரும் குமுறலுடன் உள்ளனர்.திருவான்மியூர், அடையார், கோட்டூர்பூரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் மின்சாரத் தடை பெருமளவில் ஏற்பட்டு வருகிறதாம். இதனால் தூங்க முடியாமலும், உரிய நேரத்தில் எழுந்திருக்க முடியாமலும் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.இதில் முஸ்லீம்கள் தான் பெரும் பாதிப்பை
டெல்லி: பன்றிக் காய்ச்சலால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும் அது எச்சரித்துள்ளது. மேலும், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு என்றில்லாமல், ஒருவரிடமிருந்து பலருக்கு என்ற வேகத்தில் அது பரவி வருவதாகவும் அது கூறியுள்ளது.விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில்தான்
சென்னை: புனே, மும்பைக்கு அடுத்து சென்னையில்தான் பன்றிக் காய்ச்சல் அதிக அளவில் உள்ளது. இது வரை நாடு முழுவதும் 33 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.பன்றிக் காய்ச்சலால் மகாராஷ்டிரா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் புனே நகரில்தான் பெரும் பாதிப்பு காணப்படுகிறது. அடுத்து மும்பையிலும் பன்றிக் காய்ச்சல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில் சென்னை நகரிலும்
சென்னை: சென்னை நகரில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை பெய்த மழையால் நகரமே ஸ்தம்பித்துப் போனது. எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக மாறி மக்களை அவதிக்குள்ளாக்கி விட்டது.இது தென் மேற்கு பருவமழைக் காலம். இக்காலகட்டத்தில் தமிழகத்தில் பெருமளவில் மழை இருக்காது. மாறாக, கேரளாவையொட்டியுள்ள பகுதிகளில் மட்டும் மழை இருக்கும்.ஆனால் அதற்கு மாறாக இந்த ஆண்டு பருவ