புவனேஸ்வர்: ஒரிசா மாநிலம் புசந்த்பூர் என்ற இடத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை- ஹவுரா மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கிழக்கு கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் இந்த நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டம் நடந்தது.இந்தப் போராட்டம் காரணமாக சில ரயி்ல்கள் ரத்து செய்யப்பட்டன. புவனேஸ்வர் - விசாகப்பட்டனம் - புவனேஸ்வர்
மதுரை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழர்களின் உரிமைக்காக டிசம்பர் 29-ந் தேதி கம்பம் பகுதி வழியாக கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் மறிப்போம். தொடர்ந்து கேரளா அரசு இது போன்று ஈடுபட்டால் இந்த அறவழி மறியல் நிரந்தரம் ஆகி விடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசையும்,
சென்னை: நீலகிரி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 6000 நிவாரண உதவியும், பிற நிவாரண தொகுப்புகளையும் வழங்கக் கோரி அதிமுக சார்பில் நாளை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:அண்மையில் ஏற்பட்ட கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில்
நெல்லை: சுரண்டை அருகே மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்ததாக பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து குழந்தைகளை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே கேஎம் அச்சம்பட்டியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ,
சென்னை: சென்னையில் இன்று கொட்டும் மழைக்கு மத்தியில், அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். இருப்பினும் மழையில் உண்ணாவிரதம் வேண்டாம் என ஜெயலலிதா வலியுறுத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர் அதிமுகவினர்.டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் கோரி அதிமுக சார்பில் இன்று சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரி நாளை அதிமுக சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும் என கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழக அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனம் டாஸ்மாக் நிறுவனம். அரசுக்கு இந்த அளவுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள்,
லூதியானா: 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக மத்திய அரசு செயல்படாமல் இருப்பதைக் கண்டித்து லூதியானாவில் சீக்கியர்கள் இன்று ரயில்களை மறித்து போராட்டத்தில் குதித்தனர்.200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள், லூதியானா - டெல்லி இடையிலான ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தங்கா பீரத் சங்கம் என்ற சீக்கிய அமைப்பி்ன்
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமித்துள்ள நிலத்தை கைப்பற்றப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், நவம்பர் 9ம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி தினகரன் ஆக்கிரமித்த
சென்னை: 18 மீனவர்களைக் கடத்திச் சென்றுள்ள இலங்கை கடற்படையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் நடத்துவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியக் கடலிலே ஓரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரை சிங்கள கடற்படையினர் சுற்றி வளைத்துக் கடத்தி
சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள பிரபல டிஏவி ஆடவர் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் சதீஷிடம், பள்ளி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதையடுத்து சதீஷுக்கு ஆதரவாக பெற்றோர்கள் திரண்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆர்ய சமாஜத்தின் சார்பில், சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டி.ஏ.வி. என்ற பெயரில் பல்வேறு