வாஷிங்டன்: 2010ம் ஆண்டின் சர்வதேச அரசியல்வாதி விருது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் 'அப்பீல் ஆஃப் கன்சைனஸ் ஃபவுண்டேஷன்' சார்பில் சர்வதேச அளவில் ராஜதந்திர நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 1965ம் ஆண்டு முதல் பல்வேறு சர்வதேச தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.மிகவும் கௌரவமான
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா நோபல் பரிசு மூலம் கிடைத்துள்ள 14 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை 10 அறக்கட்டளை நிறுவனங்களுக்கு நன்கொடையாக பிரித்து அளிக்கப்படுகிறது.கடந்தாண்டு அக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் ஒபாமா. அப்போதே தனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையை நன்கொடை செய்யப்போவதாக ஒபாமா அறிவித்திருந்தார்.ஆனால், விருது அறிவித்து நான்கு மாதங்கள் ஆகியும் பரிசுத்
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு நிதியுதவி செய்யவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது.இதுகுறித்து கொழும்பு நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இலங்கை அதிபர் தேர்தலின் போது எதிர்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட்டவரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்க நிதி ஆதரவு வழங்கியதாக இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்திருப்பது
டெல்லி: தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.அவருடைய பையிலிருந்து கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லிக்கு வருவதற்கு முன்பு இவர் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் போயுள்ளார். எனவே அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட நபரின்
வாஷிங்டன்: தீவிரவாதிகள் உலகின் எந்த இடத்தில் இருந்துகொண்டு சதி திட்டங்களை தீட்டினாலும் அவர்களை அமெரிக்கா ஒழித்துக்கட்டும் என அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.தற்போது ஹவாயில் விடுமுறையை கழித்து வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார்.டெட்ராய்ட் நகருக்கு சென்ற அமெரிக்க விமானத்தை நடுவானில் தகர்க்க தீவிரவாதிகள் தீட்டிய திட்டம் முறியடிக்கப்பட்ட பின்பு முதல்தடவையாக நாட்டுமக்களுக்கு
வாஷிங்டன்: தீவிரவாதிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளும், ஆலோசனை, உத்தரவு எல்லாம் பாகிஸ்தானில் இருந்து தான் வருகின்றன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.தீவிரவாத தாக்குதல் சதி திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் ஹெட்லி, ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் வாஷிங்டனில் ஹிலாரி நிருபர்களிடம் கூறுகையில்,அப்பாவிகளை கொல்லும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. ஒபாமாவின் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்து 48 சதவீதத்தினர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர். 50 சதவீதத்திற்கும் குறைவாக ஆதரவு குறைந்திருப்பதால் ஒபாமா ஆதரவு வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது. சிஎன்என், ஒபினியன் சர்ச் கார்ப்பொரேஷன் நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக்
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த சிறப்பு இரவு விருந்தில் இந்திய வாசமே தூக்கலாக இருந்தது. மேலும் அனைவரும் வியக்கும் வகையில் மன்மோகன் சிங்கை இந்தியில் வரவேற்று அசத்தினார் ஒபாமா.ஒபாமாக அதிபரான பின்னர் முதல் முறையாக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். நேற்று ஒபாமாவை
வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்காவில் காந்திய சிந்தனைகள் ஆழ்ந்துள்ள. அவரது வழியில் அமெரிக்கா பயணிக்கிறது என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.காந்தியடிகளின் பிறந்தநாளான இன்றைய தினத்தை உலகம் வன்முறை எதிர்ப்பு தினமாக கடைபிடித்து வருகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,காந்தியின் சிந்தனைங்களும், தத்துவங்களும் மார்டின் லூதர் கிங் ஜூனியரால் பின்பற்றப்பட்டது. மார்டின் லூதர் கிங்
அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண முன்னாள் ஆளுநரும், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்டவருமான சாரா பாலின், தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி விட்டதால் சாரா பாலினும், அவரது கணவர் டோட்-டும் விவாகரத்து முடிவுக்கு வந்து விட்டனர். கணவருடன் கடும் சர்ச்சையில் ஈடுபட்டதால் மன அழுத்தத்திற்கு ஆளானதால்தான் தனது ஆளுநர் பதவியை