பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உலகத் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதுகுறித்து ஆனந்த விகடன் வார இதழ் ஒரு அதிர்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், பிரபாகரனின் பெற்றோரை இலங்கை போலீசார் மற்றும் ராணுவத்தினர் கல்பிட்டியில், 'நாலாவது மாடி' என அழைக்கப்படும் சித்திரவதைக் கூடத்தில் தனித் தனியாக
புவனேஸ்வர்: ஒரி்ஸ்ஸா மாநிலம் சண்டிபூரில் வீலர்ஸ் தீவில் உள்ள இந்திய ராணுவத்தின் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ராணுவ வீரர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.ஏவுகணைகளி்ல் பொறுத்த வேணடிய வெடிகுண்டுகளை வாகனங்களில் ஏற்றியபோது அவை வெடித்துச் சிதறியதில் இந்த விபத்து நடந்துள்ளது.நேற்று மாலை நடந்த இந்த விபத்தில் ஏ.கே.சுக்லா என்ற ராணுவ வீரர் பலியானார்.
ராவல்பிண்டி: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் ராணுவ தலைமையகத்துக்கு அருகே உள்ள ஹோட்டலில் இன்று குண்டு வெடித்ததில் 34 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.மால் ரோட்டில் உள்ள ஷாலிமார் ஹோட்டலில் காலை 10.40 மணி்க்கு இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இடத்திலிருந்து மிக அருகில் தான் ராணுவ தலைமையகம் உள்ளது.தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கையில்
டெல்லி: நக்சலைட்டுகளை ஒழிக்க ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அமைச்சர் மமதா பானர்ஜியின் கோரிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிராகரித்து விட்டார்.கடைசி கட்டமாகத்தான் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்று அந்தோணி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்கமாக இருந்தாலும் சரி, நாட்டின் வேறு பகுதியாக இருந்தா3லும் சரி, உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில்
நியூயார்க்: தமிழர்களை நிர்வாணப்படுத்தி மிருகத்தனமாக இலங்கைப் படையினர் சுட்டுக் கொல்வது போன்ற காட்சி அடங்கிய வீடியோ உண்மையானதே என்று அமெரிக்காவைச் சேர்ந்த இன அழிப்புக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட தடவியல் சோதனையில் இது நிரூபிக்கப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,எங்கள் முதல் கட்ட அறிக்கையின்படி இந்த வீடியோ உண்மையானது என்று தெரிகிறது.
பெய்ஜிங்: கம்யூனிஸ ஆட்சி மலர்ந்து 60 ஆண்டுகள் முடிந்ததை சீனா நேற்று உற்சாகமாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடியது. விமான படை மற்றும் ராணுவ வாகன அணிவகுப்புகளின் மூலம் உலக நாடுகளுக்கு தனது பலத்தை வெளிகாட்டியது.சரியாக 60 ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் 1, 1949ம் ஆண்டு சீனாவில் புரட்சி ஏற்பட்டது. மா சே துங் தலைமையில் கம்யூனிஸ ஆட்சி மலர்ந்தது.
கொழும்பு: வவுனியாவில் உள்ள தமிழர்களுக்கான முகாமில் இலங்கை ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள், பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.சமையலுக்கு விறகு சேகரிப்பதற்காக முகாமிலிருந்து வெளியே சென்றவர்கள் மீது ராணுவத்தினர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.செப்டம்பர் 17ம் தேதி முதல் முகாம்களில் உள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை இலங்கை அரசு நிறுத்திவிட்டது.உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும்
வவுனியா: வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முள்கம்பி வேலி முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.வவுனியா பூந்தோட்டத்தில், கல்வியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள முகாமில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் தமிழர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.முகாமில் இருந்த நபர் ஒருவரைக் கடத்திச் சென்று
லண்டன் வன்னிப் போரின் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று சம்பவத்தின்போது அங்கு இருந்து தற்போது லண்டன் மீண்டுள்ள தமிழ்ப் பெண் தமிழ்வாணி ஞானக்குமார் என்பவர் கூறியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் தமிழ்வாணி ஞானக்குமார். இவரும், இவரது குடும்பத்தினரும் கடந்த 1994-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தனர். இவர் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப்
கொழும்பு: வடக்கு இலங்கையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்ற இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கிறது அமெரிக்க ராணுவம். இலங்கையில் வன்னிப் பெருநிலப்பரப்பு உள்ளிட்ட வடகிழக்கு மாகாணம் முழுமையாக விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் பல ஆண்டுகள் இருந்தது. இந்தப் பகுதிக்குள் ராணுவம் நுழைந்துவிடக் கூடாது என்பதால் விடுதலைப்புலிகள் ஏராளமான கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்திருந்தனர். ஆனால் மக்கள் நடமாட்டமில்லாத எல்லைப்