டெல்லி: இந்த நாடு இன்னொரு முறை பிளவுபட்டால் அதற்கு ராஜ் தாக்கரே போன்ற சக்திகள் தான் காரணமாக இருப்பார்கள் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் காட்டமாகக் கூறினார்.இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்காக மகாராஷ்டிர சட்டசபையில் சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ அபு ஆஸ்மி ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா
பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சுபாஷ் யாதவ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சுபாஷ் யாதவ் ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபாஷ் யாதவ் உள்ளிட்டோர் மீது
தீபாவளியையொட்டி பீகாரில் பிரபலங்களின் பெயர்களில் விற்ற பட்டாசுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரது பெயர்களில் வெளியான பட்டாசுகள் நல்ல விற்பனையைச் சந்தித்தன.மல்லிகா, லாலு பெயர்களில் வெளியான பயர் கிராக்கர்கள் சரமாரியாக விற்றனவாம். அதேபோல நிதீஷ் குமார் ராக்கெட்டுக்கும் ஏக டிமாண்ட்.இவர்களை
முசாபர்பூர்: ராமர் கடவுள் அல்ல என்று பேசிய மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி மீது பீகார் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி புத்ததேவ் மீது முசாபர்பூர் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் எஸ்.கே.ஓஜா என்பவர், முசாபர்பூர் முதன்மை நீதித்துறை நடுவர்
பாட்னா: பிகாரில் நேற்றிரவு மாவோயிஸ்டுகள் நடத்திய வெறித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.ககாரியா மாவட்டத்தில் உள்ள அமோசிபரேன் தியாரா என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இந்த கிராமத்தில் புகுந்த சுமார் 100 மாவோயிஸ்டுகள் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டனர்.இதில் 5 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் அந்த இடத்திலேயே
ககாரியா (பீகார்): பீகாரில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் பலியானார்கள். 14 பேரைக் காணவில்லை.பீகாரின் ககாரியா மாவட்டத்தில், பாக்மதி ஆற்றில் சென்று கொண்டிருந்த ஒரு படகு இன்று காலை கவிழ்ந்து விழுந்தது. அதில் பயணம் செய்த 7 சிறுமிகள், 2 பெண்கள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் 14
கோவை: கோயம்புத்தூர் தனியார் மில்லில் அடைக்கப்பட்டிருந்த 22 பீகார் தொழிலாளர்கள் போலீஸார் விடுவித்தனர். மேலும், இவர்களை அடைத்து வைத்திருந்த மில் நிர்வாகத்தின் சார்பில் அமர்த்தப்பட்டிருந்த 8 பேரை கைது செய்துள்ளனர்.கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீராம் கோகுல் டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த 22 தொழிலாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரிடம் அவர்களது உறவினர்கள் புகார்
டெல்லி: சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியை புரட்டிப் போட்டுள்ளார் லாலு பிரசாத் யாதவ். அதே போல டெல்லி இடைத்தேர்தலில் 2 தொகுதிகளையும் பாஜகவிடம் இழந்துள்ளது காங்கிரஸ்.இதனால் காங்கிரசும் நிதீஷ் குமாரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.பீகாரில் 18 தொகுதிகளுக்கும், டெல்லியில் இரண்டு தொகுதிகளுக்கும் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.பீகாரில்
சென்னை: பனையூரில் நடந்த கப்பல் கேப்டன்-மனைவி கொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையாளி சண்முகசுந்திரத்துக்கு கள்ளத் துப்பாக்கி சப்ளை செய்த கும்பலை சிபிசிஐடி போலீசார் பிகார் மாநிலத்தில் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர். சென்னை நீலாங்கரை அருகே பனையூரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் இளங்கோவன், அவரது மனைவி ரமணி ஆகியோர்
பாட்னா: பீகார் மாநிலம் ஜெகன்பாத் மாவட்டத்தில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.ஜெகன்பாத் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் சித்தநாத் கோவில் உள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்குக் கூடினர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. யாரோ சிலர் புரளி கிளப்பியதால்தான் திடீர் நெரிசல் ஏற்பட்டதாக