டாடா குழுமம்... பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல. இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலையை துவங்கியது டாடா நிறுவனம்தான். இந்தியாவில் விமான சேவையை ஆரம்பித்ததும் டாடாவே. இதுமட்டுமல்ல...
டெல்லி: டெல்லியில் திருடப்பட்ட ராஜ்யசபா துணை சபாநாயகர் ரகுமான் கானின் பாதுகாப்பு ஜீப் கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஓட்டுச் சென்ற நபர் அதை ரங்காபுரா பகுதியில் நிறுத்திவிட்டு தப்பிவிட்டான்.ரகுமான் கானி்ன் பாதுகாப்பு அணிவகுப்பு வரிசையில் இடம் பெறும் சிவப்பு விளக்கு பொறுத்தப்பட்ட, விவிஐபி எலெக்ட்ரானிக் பாஸ்கள் ஒட்டப்பட்ட இந்த மகிந்திரா பொலேரா ஜீப் நாடாளுமன்ற வளாகம் உள்பட டெல்லியின்
டெல்லி: ராஜ்ய சபா துணைத் தலைவர் ரகுமான் கானின் அலுவலக கார் திருடு போயுள்ளது.ரகுமான் கானி்ன் கார் அணிவகுப்பு வரிசையில் இடம் பெறும் சிவப்பு விளக்கு பொறுத்தப்பட்ட, விவிஐபி எலெக்ட்ரானிக் பாஸ்கள் ஒட்டப்பட்ட இந்தக் கார் நாடாளுமன்ற வளாகம் உள்பட டெல்லியின் முக்கிய அலுவலகங்களில் பாதுகாப்பு சோதனை இல்லாமல் நுழைய முடியும்.மேலும் இதிலுள்ள வயர்லெஸ் மூலம்
திருச்சூர்: இஸ்ரோவின் அடுத்த தலைவராக கே.ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளார். இவர் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்.கே.ராதாகிருஷ்ணன் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ளார். சனிக்கிழமை மாலை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ராதாகிருஷ்ணன் வழிபாட்டில் இருந்தபோது கோவிலுக்கு அவரது நியமனக் கடிதம் பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.தனது நியமனம் குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், போன்
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் (எப்ஐசிசிஐ) சார்பில் சென்னையில் நவம்பர் 18ம் தேதி தொடங்கி 2 நாள் நடைபெறும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை என்ற தலைப்பிலான மாநாட்டுக்கு கலைஞானி கமல்ஹாசன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.திரைத் துறையின் சகல பிரிவுகளிலும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ள கமல்ஹாசன், முதல் முறையாக எப்ஐசிசிசிஐயின் மாநாடு ஒன்றுக்குத் தலைமை தாங்கப்
டெல்லி: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜக கட்டளையிட்டுள்ளது.இதை ஜஸ்வந்த் சிங்கை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தினார்.பாஜக தலைவர் என்ற முறையில்தான் இந்தப் பதவிக்கு ஜஸ்வந்த் சிங்கை பாஜக பரிந்துரைத்தது. தற்போது பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் நீக்கப்பட்டு விட்டதால் அவரும் பதவி
திருவனந்தபுரம்: பிரபல முத்தூட் நிதிக் குழுமத்தின் தலைவர் எம்.ஜி.ஜார்ஜின் மகன் பால் எம்.ஜார்ஜ் கேரளாவில் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஜார்ஜ். பிரபலமான முத்தூட் நிதி நிறுவனத்தின் அதிபர் ஆவார். இவரது மகன் பால் ஜார்ஜ்.ஆலப்புழா - செங்கனச்சேரி சாலையில் பொங்கா என்ற இடத்தில் நேற்று நள்ளிரவில் இவர் ஒரு கும்பால் வெட்டிக் கொல்லப்பட்டார்.ஸ்கார்பியோ
பெங்களூர்: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் இணைத் தலைவர் மற்றும் போர்டு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து நந்தன் நிலகேனி விலகுகிறார்.இந்திய குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகளை மேற்கொள்வதற்காக தொடங்கப்படும் புதிய ஆணையத்தின் தலைவர் பொறுப்பை அவர் ஏற்கவுள்ளதால் இன்போசிஸ் பொறுப்புகளை ராஜினாமா செய்கிறார்.இந்திய குடிமக்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை மத்திய
சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அடுத்த மாத முடிவுக்குள் சுமார் 4 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் இது செய்யப்படும் என நிறுவனத்தின் தலைவர் ஏஆர் அன்சாரி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் துணை நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படும். அதன்மூலம் வெளிநாடுகளில் இருக்கும் நிலக்கரி
சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக கவிக்கோ அப்துல் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத் தகவலை வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி முகமது ஜமாலுதீன் தெரிவித்தார்.இதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து அப்துல்ரஹ்மான் வாழ்த்துப் பெற்றார். உடன் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், வக்பு வாரிய