கோவை: மக்கள் நலனுக்காக செயல்படாமல் ஜாதிக் கட்சி போன்று அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சி செயல்படுகின்றது. அதனால் நான் அந்த கட்சியில் இருந்து எனது பதவியை ராஜினாமா செய்கின்றேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கோவை மாநகர் செயலாளர் உபைதூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து உபைதூர் ரகுமான் கூறுகையில்,சரத்குமார் திரையுலகிற்கு வந்த போது
சென்னை: கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல், மாத்திரைகளை தந்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் நோயால் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் விஷக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும்,பன்றிக் காய்ச்சல் சோதனை
மதுரை: விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற
சென்னை: கோவையில் புதிய தமிழகம் சார்பில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.இலங்கைத் தமிழர் உட்பட உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு கோவை வ.ஊ.சி திடலில் வரும் பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக்
சென்னை: கோவையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் நடத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.பல்வேறு தமிழ் இணைய ஆர்வலர்கள், தமிழ் இணைய வல்லுநர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் சேர்த்து தமிழ் இணைய மாநாட்டையும்
கோவை: கோவையில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 10 அல் உம்மா அமைப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கோவை, அரசு மருத்துவமனை எதிரே உள்ள கிளாசிக் டவர் பகுதியில், நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கடந்த 1997ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை
கோவை: விவசாயிகள் வானிலை அறிக்கையை மொபைல் ஃபோன் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வேளாண் தொழிலில் முக்கிமாக நெல், வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால், மா, கொய்யா, மக்காச்சோளம், மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.இந்தப் பயிர்களை தாக்கும் பூச்சிகளையும், பூஞ்சான நோய்களையும் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.இதற்குத் தேவையான மருந்து மற்றும்
சென்னை: முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.மத்திய கைத்தறி வளர்ச்சிக் கழகம் சார்பில் பட்டு, கைத்தறி துணிகள் கண்காட்சியை வள்ளுவர் கோட்டத்தில் துவக்கி வைத்த தயாநிதி மாறன் நிருபர்களிடம் பேசுகையில்,முதல்முறையாக தமிழ்நாட்டில் பட்டு கண்காட்சி மற்றும் விற்பனை சென்னையில் நடைபெறுகிறது. 23ம் தேதி
சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குக் கோவை கொடிசியா அரங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,2010ம் ஆண்டு ஜுன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 5 நாட்களுக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் நடைபெறவுள்ளது.அதற்குத் தகுதியான இடத்தைத் தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதி கடந்த
சென்னை: வருவாரா, மாட்டாரா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில் கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தான் பங்கேற்கவிருப்பதாக இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி உறுதிப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக மாணவர் தேவானந்த் என்பவருக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி