சென்னை: பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின்பேரில், சென்னையில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தி லட்சக்கணக்கில் ரொக்கம் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினார்கள். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மச்சந்திர சிங், நாராயண சிங் மற்றும் பிரமோத் சிங். இவர்கள் நடத்தும் இரும்பு தொழிற்சாலைகளில் பல கோடி அளவுக்கு
நெல்லை: காணாமல் போன சட்டையை கண்டுபிடித்துத் தரகோரி நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நேற்று ஒரு லாரி கிளீனர் நல்ல குடிபோதையில் வந்து புகார் கொடுத்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குப் போய் புகார் கொடுக்க முயன்ற அவரை டி.ஆர்.ஓ. அலுவலக ஊழியர்கள் அடித்து விரட்டி விட்டனர்.திசையன்விளையை சேர்ந்தவர் கோயில்ராஜ் மகன் செல்லத்துரை. இவர் நெல்லை டவுனில் லாரி
திரைப்படம் எடுக்க பொதுமக்களிடம் பணம் வசூலித்துவிட்டு ஏமாற்றிய புகாரில் இயக்குநர் களஞ்சியம் கைதாகக் கூடும் எனத் தெரிகிறது.பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும் போன்ற படங்களை இயக்கியவர் களஞ்சியம். இவர் திருவண்ணாமலை வாழைசித்தர் அறக்கட்டளை தலைவராகவும் உள்ளார்.சீனிவாசன் என்பவருடன் இணைந்து சிவகுரு பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி என் உயிர் நீதானடி என்ற திரைப்படம் எடுப்பதாக
சிங்கம்புணரி: புகாரின் மீது வழக்கு பதியாத சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காசியாபிள்ளை நகரை சேர்ந்தவர் மணிமொழி. தனியார் பள்ளி ஆசிரியர். இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் 3 ம் தேதி, பத்து பவுன் நகைகள் களவு போனது.அதேபோல, இதே பள்ளியில் பணிபுரியும் சித்ரா, சுந்தரம் நகர் ரோட்டில் நடந்து சென்ற போது
சென்னை: திருப்பதி கோவில் சேவை நிகழ்ச்சிகளை முன்பதிவு செய்து தரிசக்க மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளை சில உள்ளூர் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து முன்பதிவு வரும் 18ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பொதுமக்கள் சுமார் 100 பேர் திரண்டு ஒரு கிராமத்தை காணவில்லை என மாவட்ட கலெக்டரிடம் 'சிட்டிசன்' பட பாணியில் புகார் கொடுத்துள்ளனர்.தூத்துக்குடி அருகே சங்கரப்பேரி என்ற கிராமத்தை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் பால் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் பொன் கருப்பசாமியின் தலைமையில் திரண்டு மாவட்ட கலெக்டர் பொறுப்பு வகித்து
சூரத்: சூரத்தில் இருக்கும் துணி கடை ஒன்றில் ரூ. 56 லட்சத்துக்கு சரக்கு வாங்கி பணம் கட்டாமல் ஏமாற்றிய மூன்று பேரை போலீஸார் சென்னையில் கைது செய்தனர்.இது குறித்து சூரத், சலாபத்புரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏஆர் பாலாஷ் கூறுகையில்,சூரத் லாம்பே ஹனுமன் சாலையில் வசிக்கும் விக்ரம் ராஜ்புரோகித் என்பவர் கடந்த செப்டம்பர் 17ம் தேதி ஒரு புகார்
பாடலாசிரியர்களுக்கு யாரும் ஒழுங்கான சம்பளம் தருவதே இல்லை என்று கவிஞர் சினேகன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சினிமாவைப் பொறுத்தவரை பாடல்கள் என்னதான் முக்கியத்துவம் கொண்டவையாகத் திகழ்ந்தாலும், அதை எழுதுபவர்களுக்கு ஒழுங்கான சம்பளம் கிடைப்பதில்லை.சம்பளத்தைப் பொறுத்தமட்டில் உதவி டைரக்டர்களும் இந்தப் பிரிவில் வந்து விடுகிறார்கள். இரு தரப்பினருக்குமே
கோவை: அமெரிக்க டாலர்கள் தருவதாகக் கூறி எஸ்எம்எஸ் அனுப்பி லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் நைஜீரிய கும்பல் மீது இருவர் புகார் அளித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது. அந்த பரிசுத் தொகையைப் பெற ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால்போதும். மேலும், தொடர்புக்கு இ-மெயில் மூலம் தொடர்பு
சென்னை: சென்னையில் நடிகர் விவேக்கின் கொடும்பாவியை எரித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இருப்பினும் போலீஸாரின் தலையீட்டீன் பேரில் அது கைவிடப்பட்டது.தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக நடிகர் சங்கத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் பேசிய நடிகர்கள், நடிகைகள் படு ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து நேற்று சென்னையில் குழுமிய பத்திரிக்கையாளர்கள்