திருவனந்தபுரம்: பிரபல விஞ்ஞானி கே.ராதாகிருஷ்ணன், இஸ்ரோ தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.தான் இயக்குநராகப் பணியாற்றி வந்த திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலேயே இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இஸ்ரோ தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன். இதற்கு முன்பு நான் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில் மிகப் பெரிய பொறுப்பு இது என்று கூறியிருந்தேன். என்
திருச்சூர்: இஸ்ரோவின் அடுத்த தலைவராக கே.ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளார். இவர் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்.கே.ராதாகிருஷ்ணன் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ளார். சனிக்கிழமை மாலை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ராதாகிருஷ்ணன் வழிபாட்டில் இருந்தபோது கோவிலுக்கு அவரது நியமனக் கடிதம் பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.தனது நியமனம் குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், போன்
வாஷிங்டன்: இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் நோசட் ஒரு இஸ்ரேல் உளவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இஸ்ரோவின் முக்கியத் தகவல்கள் எதுவும் இவரிடம் பகிர்ந்தளிக்ப்படவில்லை என்று இஸ்ரோ விளக்கியுள்ளது.நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி நோசட், சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க குழுவில் இடம் பெற்றிருந்தார். சந்திரயான் திட்டத்தில் இவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு
வாஷிங்டன்: நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பது உண்மைதான். இதை இஸ்ரோவின் சந்திரயான்-1 உதவியுடன் நாசா கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.இதை நாசா விஞ்ஞானிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான்-1 விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த நாசாவின் எம்3 எனப்படும் மூன் மேப்பர் சாதனம் கண்டுபிடித்துள்ளது. இது இஸ்ரோவை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.இந்த நிலையில் இதுகுறித்து நாசா விளக்கம் அளித்துள்ளது. வாஷிங்டனில்
டெல்லி: நக்சலைட்டுகளின் கொட்டத்தை ஒடுக்க விமானப்படை மற்றும் இஸ்ரோவின் உதவியை உள்துறை அமைச்சகம் நாடியுள்ளது.அதன்படி, இந்த ஆண்டு இறுதியில், நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படவுள்ளது. மேலும், நக்சலைட்கள் நடமாட்டம் குறித்து இஸ்ரோ சாட்டிலைட் படங்களை எடுத்து வழங்கவுள்ளது.இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வகுத்துள்ள திட்டம்..கோப்ரா எனப்படும் நக்சலைட்டுகளுக்கு எதிரான கமாண்டோப்
பெங்களூர்: சந்திரயான்-1 விண்கலத்தின் தோல்விக்கு வெப்பத் தாக்குதலே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், சந்திரயான்-1 சந்தித்த பல்வேறு பிரச்சினைகளை இஸ்ரோ நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்காமல் மறைத்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.இந்த ஆண்டு மே மாதம் சந்திரயான்-1 விண்கலம், நிலவின் பாதையிலிருந்து 200கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு அது 100 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருந்தது. அந்த
கொச்சின்: இந்தியாவில் சுமார் 50 ஆயிரம் கிராமங்கள் எந்த தொலை தொடர்பு வசதியும் இல்லாமல் இருக்கிறது. இந்த குறையை போக்கும் வகையில் இஸ்ரோ புதிய செயற்கோளை வடிவமைத்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் கிராமங்கள் தகவல் தொடர்பு வலையில் இணைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.இது குறித்து கொச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,நமது
பானாஜி: சர்வதேச ஏரோனாடிக்ஸ் அகாடமியின் (ஐஏஏ) தலைவராக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இப்பதவிக்கு வரும் அமெரிக்கர் அல்லாத முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.இன்று கோவா மாநில தலைநகர் பானாஜியில் குறைந்த செலவில் ராக்கெட் அனுப்புவது தொடர்பான விஞ்ஞானிகள் கூட்டம் நடந்தது.இதில் சர்வதேச ஏரோனாடிக்ஸ் அகாடமி பொது செயலர் ஜெஎம் கான்டென்ட் கலந்து
பனாஜி: சந்திரயான்-1 விண்கலத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் முற்றிலும் செயலிழந்து போனதால்தான் அதிலிருந்து தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு எந்தவித சிக்னலும் வரவில்லை. கம்ப்யூட்டர்கள் செயல்படாத நிலையில், சந்திரயான்-1 திட்டத்தை தொடருவது சாத்தியமல்ல. எனவே அது முடித்துக் கொள்ளப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.ரூ. 400 கோடி மதிப்பீட்டிலான இந்தியாவின் முதலாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1
பெங்களூர் : இந்தியாவின் ரூ. 400 கோடி மதிப்பிலான கனவுத் திட்டமான சந்திரயான் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. சந்திரயானுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது சந்திரயான். நிலவை ஆராய இந்தியா அனுப்பிய விண்கலம்தான் சந்திரயான். இந்தியாவின் முதல் ஆளில்லாத நிலவுப் பயணமும்