கொழும்பு: விடுதலைப் புலிகள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் நீதிமன்றங்களை அமைக்க இலங்கை அரசு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.இந்தப் பகுதிகளை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகள்தான் வைத்திருந்தனர். அவர்களே சட்டத்துறையை நிறுவி நீதிமன்றங்களையும் அமைத்து நடத்தி வந்தனர். இந்த நீதிமன்றங்களை கங்காரு நீதி்மன்றங்கள் என்று இலங்கை அரசு கூறி வந்தது.
கொழும்பு: அதிபர் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிக்க முக்கிய எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது.ஏற்கனவே ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியும் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பொன்சேகாவுக்கான ஆதவை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று அறிவித்தார்.இதுகுறித்து ரணில் செய்தியாளர்களிடம் கூறுகையில், விடுதலைப் புலிகளை வீழ்த்திய ஹீரோவான பொன்சேகாவை நாங்கள்
கிளிநொச்சியை மட்டுமல்ல, எல்லாவற்றையுமே இழந்து விட்டு நிற்கிறோம். இதில் ஈழத் தமிழர் பற்றிய படத்தை எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்று தெரியாததால்தான் அந்தப் படத்தை எடுக்கவில்லை என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். அமீர் கதாநாயகனாக நடிக்கும் யோகி படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ரூ.12 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் சென்னையின் குடிசைப் பகுதிகளைச்
வன்னி: விடுதலைப் புலிகள் மறைவிடங்களை சோதனையிட்டு வரும் இலங்கைப் படையினர், கப்பல்களைத் தாக்கப் பயன்படுத்தப்படும் டார்பிடோ குண்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.விடுதலைப் புலிகள் வசம் இரு்நது வந்த பகுதிகளை மீட்டுள்ள ராணுவம் தற்போது புலிகள் அப்பகுதிகளில் புதைத்து வைத்து போயுள்ள ஆயுதங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.வன்னிப் பகுதியில் நிறைய ஆயுதங்களையும், வெடிபொருட்களையும், நீர்மூழ்கிக் கப்பலையும் கண்டுபிடித்த இலங்கை ராணுவத்தினர்
கொழும்பு: வட இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலையெடுக்காமல் தடுப்பதற்காக தமிழர்கள் பகுதிகளான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில், ராணுவ முகாம்களை அமைக்க திட்டமிட்டு வருகிறதாம் இலங்கை அரசு.விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து விட்டதாக கூறுகிறது இலங்கை அரசு. இந்த நிலையில், தமிழர் பகுதிகளில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலையெடுக்காமல் தடுப்பதற்காக ராணுவ முகாம்களை அமைக்க அது திட்டமிட்டுள்ளது.விடுதலைப்
கிளிநொச்சி: விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி நகருக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பலத்த பாதுகாப்புடன் வந்தார்.ராஜபக்சே தலைமையிலான அரசுக் குழு நேற்று காலை திடீரென கிளிநொச்சிக்கு வந்தது. ராஜபக்சே வருகையயொட்டி மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ராணுவத்தினரை சந்திக்கும் முகமாகவே ராஜபக்சே கிளிநொச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாயா ராஜபக்சே, ராணுவ தளபதி
வன்னி: தமிழின அழிப்பினைத் தீவிரப்படுத்துவதற்காக வன்னிப் பகுதியில் மருத்துவ சேவையை சிங்கள அரசாங்கம் முழுவதுமாக தடை செய்துள்ளது.
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிளிநொச்சி அருகே உள்ள முரசு மோட்டை என்ற இடத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 2 பள்ளிக்கூடங்கள் இடிந்து நாசமாயின.
சென்னை: கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய மறு நாள், இந்தியாவின் ரா உளவு அமைப்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் குழு, பாக் ஜலசந்தி பகுதியில் ரகசிய வான் வழி ஆய்வை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வன்னி: கிளிநொச்சி வீழ்ச்சி தற்காலிகமானதே.