நெல்லை: நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி்ன் கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு கூறினார். நெல்லை மாவட்டம் சிவந்திபுரத்தில் அம்பை தாலுகா தமிழ்நாடு விவசாய சங்க 18வது மாநாடு நடந்தது. இதில் அகில இந்திய கம்யூ கட்டுபாட்டு குழு தலைவர் நல்லகண்ணு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து கொண்டிருப்பதாக அக் கட்சி கூறியுள்ளார்.அந்தக் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் கார் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் எரிக்கப்பட்டது. அதில் உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந் நிலையில் இன்று அதிகாலை தா.பாண்டியன் ரயில் நிலையம்
நெல்லை: விலைவாசி உயர்வு கட்டுகடங்காமல் செல்கிறது. வருகிற இடைத் தேர்தல் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுங்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுபாட்டு குழு தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.நெல்லையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தூத்துக்குடியில் துறைமுகம் வர இருப்பதால் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நில மதிப்பு உயர்ந்து வருகிறது.பட்டா இல்லாமல் 100
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று மத்திய அமைச்சரும் திமுக தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி கூறியிருப்பதன்மூலம் இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர்,தமிழகத்தில் நடைபெறவுள்ள 5 தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.
தூத்துக்குடி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதிமுகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. சட்டசபை இடைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்று கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு கூறியுள்ளார்.தூத்துக்குடி வந்த நல்லகண்ணு அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறுகையில், சட்டப்பேரவை இடைத்தேர்தலை பொருத்தவரை அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடரும். இது தொடர்பாக ஜூலை 29, 30
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்பிக் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.தூத்துக்குடி ஸ்பிக் நகரில், மூடப்பட்டுள்ள ஸ்பிக் ஆலையை திறக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலர் மோகன்ராஜ் தலைமையி்ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கட்சியின் மூத்த தலைவர்
வத்தராயிருப்பு: மக்களவைத் தேர்தலில் தேமுதிக இல்லாமல் இருந்திருந்தால் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு தெரிவி்த்துள்ளார்.வாக்களார்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் வத்தராயிருப்பில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு கலந்து கொண்டு பேசுகையில்,ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ரூ. 25 லட்சத்துக்கு மேல்
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்த கன்னியாகுமரி மாணவருக்கு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கம்ப்யூட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளார்.இது குறித்து அதிமுக தலைமையகம் வெளியிட்ட செய்திகுறிப்பில்,பத்தாம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலாவது இடம்பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் பேரூராட்சி 14வது வார்டு அதிமுக உறுப்பினர் திருமதி.பி.மார்சிலின்
தூத்துக்குடி: விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.இது குறித்து கோவில்பட்டியில் அவர் அளித்த பேட்டியில்,தமிழக அரசு சூழ்ச்சியும், ஆட்சி அதிகார பலத்தையும் கொண்டு தேர்தல் முடிவுகளை முன் கூட்டியே முடிவு செய்தது. சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு ஆதரவாக முடிவுகள் மாற்றப்பட்டுள்ளன.பண பலத்தைக் கொண்டு
மானூர்: காங்கிரஸ் ஆட்சியில் விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விவசாயிகளை புறக்கணித்துவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நல்லகண்ணுக்கு மானூர் பகுதியில் அதிமுக கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில்,மின்சார தட்டுபாட்டால் இன்று தொழில் துறை,