clear
clear
Search results for "Rishi sethu" in Oneindia Tamil
தீட்டுக்கு ஒதுங்குவதில்லைஎன் வீட்டில் குடியிருக்கும்சிட்டுக்குருவிகள்...வண்ணத்துப் பூச்சிகளின்இறக்கைகளுக்குள் குடியேறிவிடுகிறதுஅவ்வப்போது மனது...என்ன தைரியம் மின் கம்பியில் வரிசையாய் அமர்ந்திருக்கும்சிறு பறவைகள்...வீரியமழைக்கு ஒரு பாடல்மென் தூரலுக்கொரு பாடல்குளிர் காற்றுக்கென்றொன்றாய் விதவிதமாய் வெளியெங்கும்நிறைத்துப்போகும் வெண் நாரைகளுக்குராகங்கள் சுரங்கள் கட்டுப்படுகின்றன...கொட்டிக்கிடக்கும் இலைச்சருகுகளுக்கிடையேஊர்ந்துபோகும் நீள் பாம்பிற்குஇரையாகிவிடலாமென்ற எச்சரிக்கையோடேபதுங்குகிறது வெள்ளெலி .. என் மனமும் அதனோடே... மின்னஞ்சல்: rishi_sethu23@rediffmail.com

சொல்லப்பட்ட மந்திரகோஷங்கள்எதுவும் புரியவில்லைஓரமாய் அமர்ந்து தன் சுய ரசிப்ப்புக்குட்பட்டுவாசித்துகொண்டிருக்கும் மேளதாளங்களும்ரசிக்கவாய்க்கவில்லைபட்டுப்புடவைகள் சர சரக்க வந்துதெரியுமாவெனக்கேட்டு திகைக்க வைக்கும்முன்பின் நானறியா உறவுகளும் ரகசியமாய் சிரித்துப்போகும்நண்பர்களும் அதிர்வாயிருக்கிறதுஎல்லாம் முடிந்து உறவுகளோடு மாறிமாறிஎடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ஓரமாய் வந்தமர்ந்த குழந்தை என்ன உறவென்பதுஇன்னமும் புரியவில்லைகல்யாணத்திற்கு வந்து வாழ்த்திய மனைவியின் நண்பர்கள் முகம் மனதில் பதியவில்லைஎனக்கு உணவு பரிமாறும் நண்பர் சாப்பிட்டிருப்பாராதெரியவில்லைஅந்த மேளகோஷ்டி சாப்பிட்டிருக்குமா?இத்தனைக்குப்பிறகும்

முத்தம் தந்த நீ இல்லைநீ தந்த முத்தம் மட்டும்நினைவில் முள்ளாய்...பருவச்சுமை பூசப்பட்டஅந்நாளின் முத்தம்கனவுகளைக் கொடுத்துப்போனதுபித்தனாய் நான்...அன்புள்ள என ஆரம்பித்துஎப்போதும் முத்தங்களுடன்என்று முடியும் உன் கடிதங்களைஅறிவியல் தின்றுவிட்டதுஎன்றாலும்,உன் குறுஞ்செய்திசுமந்து வரும் விரல்களின் ஸ்பரிசங்கள்...அப்பிரிவின் இறுதி நொடிகளில்நாம் பகிர்ந்துகொண்ட முத்தம்மரணம்வரை கூடவரும்...எதுவானால் என்னஅந்த முதல் முத்தம் பற்றிசொல்லாமலே விடுகிறேன்அவ்வுணர்வுசொல்ல வார்த்தைகளிலில்லை...

நீயில்லா வெறுமை உணர்த்தும் என்நகராப்பொழுதுகளில் பால்வீதியின்இலக்கற்று சிதறலாயலையுமொருதுகளென உணர்கிறேன்...எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்றுஉன் சிறுபடமுட்பட..ஒவ்வொரு அங்குலமாய் நீர் தெளித்துதுடைத்துமாயிற்று வீட்டை..வெளிவந்துதீ வைத்துக்கொளுத்தினேன்..தீவென பிரிந்தாயிற்றுபிள்ளைகளிடமும் காணமுடிகிறது நம்மீதான வெறுப்பை..சிரித்துக்கடக்கிறேன்வாழ்க்கை தொடர்கிறதுகற்றுக்கொடுத்தலை...கண்கள் பனிக்க உன்எல்லா உறுப்புகளையும் தானாமாய் கொடுக்கிறேன்உன் இறத்தலை-இருத்தலாக்கி பிரிந்தாய்...கடைசியின் கடைசியாய்மிஞ்சிப்போய்விடக்கூடிய பயமெனக்குஏதோவொன்றிற்காய் காத்திருக்கிற்தென் உயிர்எப்போதும் நிகழலாமென் மரணமெனச்சொல்லிபலகாலமாயிற்று...உலகின்கடைசிமனிதாகிவிடசாத்தியமும்கூட... -ரிஷி சேது (rishi_sethu23@rediffmail.com)

-ரிஷி சேதுஉன் கவிதை வரிகளால் கட்டிப்போட்டாய்நான் மயங்கிக்கிடந்த ஓர் வேளையில்நீ காதலைச் சொன்னாய்-நான் சிறு பறவையாய் தலையசைத்தேன்.

எப்போது வேண்டுமானாலும் எழுந்து போவதற்கான அவகாசத்திற்காய்- நீ எப்போதும் காத்திருக்கும் ஆசையோடு நான்.

- ரிஷி சேது கடவுள் எனக்கு பரிச்சயிக்கப்பட்டார் ஒரு கையில் வேலுடனோ அல்லது கொடிய ஆயுதங்களுடனோ காலடியில், கையில், கழுத்தில் அல்லது பக்கத்தில் ஏதோ ஒரு விலங்கினூடே கடவுள் எனக்கு பரிச்சயமானார் ஏதோ செய்யாத குற்றத்திற்காக மரச்சட்டங்களில் பிணைக்கப்பட்டு கடவுள் எனக்கு பரிச்சயமானார் சற்றும் புரியாத வாக்கியங்களில்.

-ரிஷி சேது முன்னெப்போதும் இல்லா ஒரு அனுபவம் முட்படுக்கையில் கிடக்கையில் கிடைத்திருக்கும் பீஷ்மருக்கு.

-ரிஷிசேது போனமுறை பேசியபோது பாக்கியக் கிழவி செத்துப்போனதை அப்பா சொல்லாமலே விட்டிருக்கலாம் கூன் முதுகும் பனம்பழ வாசமுமாய் வந்துபோகிறது அவளின் நினைவுகள் -ரிஷிசேது(rishi_sethu23@rediffmail.

- ரிஷி சேது அப்பா என்னை "தம்பி" ங்கறார் ஆத்தா என்னை "ஏலே"ங்கும் அடுத்தவீட்டு ஐயர் என்னை "குப்புசாமி பேரன்னும்" அவங்கவீட்டம்மா "மண்ணாங்கட்டின்னும்" ஆபீஸில் என்னை "சார்" னும் கூப்பிட்டாலும்.
Find More Articles On: poem | rishi sethu

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!