மும்பை: இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் ஏறுமுகம் தொடங்கியிருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் 183 புள்ளிகள் உயர்ந்ததால், சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. இன்றைய வர்த்தகத்துன் துவக்கமே 17,043.32 புள்ளிகளைத் தாண்டி அசத்தலாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 56.45 புள்ளிகள் அதிகரித்து 5,055.40 புள்ளிகளோடு தொடங்கியது.இன்றைய வர்த்தகத்தி்ல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
டெல்லி: நிதி நெருக்கடியைச் சமாளிக்க லாபத்தில் இயங்கும் அனைத்து அரசுத் துறை நிறுவனங்களிலும் 10 சதவிகிதத்தை விற்பனை செய்வதற்கான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பழைய, புதிய பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தின் பங்குகளுமே இந்த வகையில் தனியாருக்கு விற்கப்படும். இந்தத் தகவலை, காபினெட் கூட்டத்துக்குப் பிறகு மத்திய உள்துறை
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஈஐடி பாரி இந்தியா நிறுவனம் கர்நாடகத்தைச் சேர்ந்த சதாசிவா சுகர்ஸ் நிறுவனத்தின் 76 சதவீத பங்குளை வாங்கியுள்ளது. ரூ. 50 கோடிக்கு இந்த டீல் முடிந்துள்ளது.இதுகுறித்து பாரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாளைக்கு 2500 டன் அரவைத் திறன் கொண்ட சர்க்கரை ஆலையை சதாசிவா சுகர்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த ஆலையின்
கிட்டத்தட்ட 16 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 5000 புள்ளிகள் என்ற குறியீட்டைத் தொட்டுள்ளது தேசிய பங்குச் சந்தையான நிப்டி. காலையில் வர்த்தகம் துவங்கியதும் சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்ந்து 16790-ஐக் கடந்தது. ஏசிசி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள், நல்ல லாபத்தில் கைமாறின. டாடா பவர் பங்குகள் 2.5 சதவிகித லாபத்தில் விற்பனையாகின. ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், எச்சிஎல்,
மும்பை: கடந்த வாரம் முழுவதும் இறங்குமுகம் காட்டிய இந்திய பங்குச் சந்தை இந்த வாரத்தின் துவக்க நாளி ஏறுமுகம் காட்டி முதலீட்டாளர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது. பிற்பகலுக்குப் பின் 218 புள்ளிகள் உயர்வு பெற்ற சென்செக்ஸ் குறியீட்டு எண் 15907-ல் நின்றது. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 70 புள்ளிகள் உயர்ந்தது. இன்றைய நாளின் வர்த்தகத்தில்
டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய உருக்கு நிறுவனமான செயிலின் பங்குகளை விற்கிறது மத்திய அரசு. இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 85.82 சதவீத பங்குகள் உள்ளன. மீதி 10 சதவிகிதம் பொதுமக்களிடமும், 4.59 சதவீத பங்குகள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமும் உள்ளன. இப்போது தன்னிடமுள்ள பங்குகளில் மேலும் 10 சதவீதத்தை பொதுமக்களுக்கு விற்க மத்திய அரசு முடிவு
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் மிகவும் வீழ்ச்சியடைந்தது. ஆரம்பத்தில் 440 புள்ளிகளுக்கும் மேல் மளமளவென்று சரிந்த பங்குச் சந்தை குறியீட்டெண்கள், பிற்பகலுக்குப் பிறகே ஓரளவு நிலைபெறத் துவங்கியது. நிப்டியிலும் 140 புள்ளிகளுக்கும் மேல் சரிவு ஏற்பட்டது. டிஎல்எப் பங்குகளில் இன்று பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. 6.5 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டு ரூ.398க்கு கை மாறியது.ஸ்டெரிலைட்,
டெல்லி: எத்தனை பாடங்கள் கற்றாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் லாபத்தில் இயங்கும் அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் முரட்டுப் பிடிவாதம் காட்டி வருகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு. இன்னும் சில மாதங்களுக்குள் நவரத்னா எனப்படும் லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் மும்முரம் காட்டி வருகிறது மத்திய அரசு.இந்தப் பங்கு
மும்பை: தொடர்ந்து 5 நாட்கள் சக்கைப் போடு போட்ட இந்திய பங்கு வர்த்தகம், இன்று டல்லடித்தது. காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததிலிருந்தே 100 புள்ளிகள் இறங்குமுகத்திலேயே இருந்தது சென்செக்ஸ். பெரிய நிறுவனங்களின் பங்குகளும் குறைந்த லாபத்திலேயே கைமாறின, அல்லது குறைந்த அளவு நஷ்டம் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இன்று வீழ்ச்சிப் போக்கு காணப்பட்டது. 30 புள்ளிகள்
மும்பை: வாரத்தின் முதல்நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தையில் பரபரப்பான வர்த்தகம் நடந்து வருகிறது. குறிப்பாக ஐடி துறை சார்ந்த பங்குகளில் இன்று லாபம் கொட்டுகிறது என்றால் மிகையல்ல.வர்த்தகம் துவங்கியபோதே 220 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இப்போது 320 புள்ளிகள் உயர்வுடன் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதன்மூலம் மீண்டும் 15000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது சென்செக்ஸ்.இந்த துறை பங்குகள்