சங்கரன்கோவில்: விசைத்தறிக்கான நூல் விலை உயர்வை கண்டித்து சங்கரன்கோவில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் வரும் 17ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணா விரத போராட்டம் நடக்கிறது.சங்கரன்கோவிலில் விசைத்தறி முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான விசைத்தறி இயங்கி வருகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10
சென்னை: தங்களது சம்பள பாக்கியைத் தரக்கோரி வரும் 24-ம் தேதி முதல் ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிக்கையையும் விடுத்துள்ளனர். ஏற்கெனவே தங்களின் சம்பளம் மற்றும் இதர படிகளில் எந்த வெட்டும் இருக்கக்கூடாது எனக் கோரி மூத்த விமானிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 5 நாட்கள் நீடித்தன. இதனால்
புதுக்கோட்டை: இலங்கை கடற்படை காடையர்களால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள 18 மீனவர்களையும் விடுவிக்கவும், மீட்கவும் கோரி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் இறங்கியுள்ளனர். இதனால் அங்கு மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் கடல் பகுதியில் கடந்த 2-ந் தேதி மீன்பிடித்து கொண்டு இருந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடாவடியாக சிறைபிடித்து சென்றனர். அவர்களுடைய
நெய்வேலி: என்எல்சி தொழிற்சங்க கூட்டமைப்பினர் வரும் 5 ம் தேதி இரவு முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் ஊக்க ஊதியம் தொடர்பாக கடந்த 8 ம் தேதி புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுசவும், பாட்டாளி தொழிற்சங்கமும் கையெழுத்திட்டன. அங்கீகரிக்கப்படாத சிஐடியு
மும்பை: வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் ஏர் இந்தியா பைலட்டுகள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் இறங்கப்போவதாக எச்சரித்துள்ளனர்.பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நஷ்டத்தைச் சரிகட்ட சம்பளக் குறைப்பு, செலவுக் குறைப்பு, பணியாளர் குறைப்பு என பல வழிகளைக் கையாண்டு வருகிறது ஏர் இந்தியா நிர்வாகம். இன்னொரு பக்கம் சம்பளத்தை உரிய
மும்பை: இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் ரூ 406.69 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது ஜெட் ஏர்வேஸ். இந்த இழப்புக்குக் காரணம், பாதிக்கும் மேற்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் குறைந்த கட்டண சேவைக்கு மாற்றப்பட்டதுதான் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸின் மொத்த வருமானம் இந்தக் காலாண்டில் 26.9 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த காலாண்டில்
நெய்வேலி: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிரந்தரத் தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.போனஸ் மற்றும் ஊக்கத் தொடர்பாக என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான 2 சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.இதையடுத்து தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை ஸ்டிரைக் அறிவித்தன. அவர்களுடன் மேலும்
நெய்வேலி: என்எல்சி எனப்படும் நெய்வேலி லிக்னைட் நிறுவன நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் ஊக்கத் தொகை தொடர்பான பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.இதுதொடர்பான ஸ்டிரைக் அறிவிப்பை அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை வெளியிட்டுள்ளன.போனஸ் மற்றும் ஊக்கத் தொகை குறித்த தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நிரந்தரத்
டெல்லி: ஐந்து நாளாக நடந்து வந்து ஸ்டிரைக்கை ஏர் இந்தியா நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் வாபஸ் பெற்றுள்ளனர். ஊதியத்துடன் கூடிய ஊக்கத் தொடர்பாக ஏற்கனவே இருந்து வரும் நடவடிக்கைகள் அப்படியே நீடிக்கும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக பைலட்டுகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பைலட்டுகளின் பிரதிநிதியான கேப்டன் வி.கே.பல்லா கூறுகையில், சம்பளக் குறைப்பு
டெல்லி: விமானிகளின் வேலை நிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவை 15 நாட்களுக்கு ரத்து செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் ஜாதவ் தெரிவித்துள்ளார்.ஊக்க தொகை மற்றும் படிகளை ஏர் இந்தியா நிறுவனம் குறைந்ததை அடுத்து விமானிகள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் 46 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் விமானிகளின் சங்கங்களுக்கும் ஏர்