ஜெய்ப்பூர்: மரபணு (டிஎன்ஏ) பரிசோதனைக்காக தனி சட்டம் கொண்டுவரப்படும். இதுதொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.அகில இந்திய தடய அறிவியல் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் சிதம்பரம் பேசியதாவது:நாட்டில் தொழில்நுட்பம் வளர்வது போல, குற்றங்களின் தன்மையும் நவீனமாகிக்கொண்டே போகின்றன. இதனால், வழக்கு விசாரணைகளில் முக்கிய
மும்பை: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக விளையாடாத வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.யாரும் எதிர்பாராத வகையில் வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிடும் அணியில் இடம் பெறுகிறார்.இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் 3 டெஸ்ட், இரண்டு
டோகியோ: சுனாமியை முன்னதாக அறிந்து எச்சரிக்கை வழங்கும் சோதனை இன்று இந்திய பெருங்கடல் பகுதியில் நடத்தப்படுகிறது. ஐநா சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த சோதனையில் இந்தியா, இந்தோனேசியா உட்பட 18 நாடுகள் பங்கேற்கின்றன.கடந்த 2004ம் டிசம்பர் 26ம் தேதி இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட பயங்கர சுனாமிக்கு இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்தை சேர்ந்த லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்
பியாங்யாங்: வட கொரியா நேற்று ஒரே நாளில் அணுஆயதங்களை ஏந்தி சென்று தாக்கும் திறன் படைத்த 5 ஏவுகணை சோதித்துள்ளது.அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் சுமூக பேச்சுவார்த்தை துவங்கியுள்ள நிலையில் வட கொரியா இந்த சோதனைகளை செய்துள்ளது. இதற்கு தென் கொரியா கடும் அதிருப்தி வெளியி்ட்டுள்ளது.இது குறித்து தென் கொரியாவை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி
ஜோகன்னஸ்பர்க்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை கோட்டைவிட்ட இந்திய அணிக்கு ஐசிசி விருதுகள் ஆறுதல் அளித்துள்ளன. சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் விருது கேப்டன் டோணிக்கும், சிறந்த டெஸ்ட் வீரர் விருது கம்பீருக்கும் வழங்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் ஆஸ்கார் எனப்படும் ஐசிசி விருதுகள் நேற்று தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த கோலாகல விழாவில் வழங்கப்பட்டது. விருத்துக்கான வீரர்கள் பட்டியலை வெஸ்ட்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.அவரது பெயர் சுசிலா மேரி. பாளையங்கோட்டை ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் அந்தோணி. இவருக்கு கடந்த சில தினங்களாக இவருக்கு சளி காய்ச்சல் இருந்து
தைபே: நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 வினாடிகள் முன்னதாக அபாய மணியை எழுப்பும் கருவியை ஒன்றை தைவான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.லேப்டாப்பின் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் இந்த கருவி கம்ப்யூட்டருடன் பொருத்தி கொள்ளும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதை லிப்ட்களுடனும் இணைத்து கொள்ளலாம்.இந்த கருவி குறித்து தைவான் தேசிய பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு பேராசிரியர் வூ
புனே: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று புனே மற்றும் அகமதாபாத்தில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 116 ஆக உயர்ந்துள்ளது.நேற்று இரவு புனே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தீப் தைனே என்ற 35 வயது வாலிபர் மரணமடைந்தார். இதையடுத்து புனேவில் மட்டும் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின்
பெங்களூர்: பன்றிக் காய்ச்சலுக்கு பெங்களூரில் மேலும் நான்கு பேர் பலியாகியிருப்பதை நேற்று சுகாதார துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த நோய்க்கு பலியானவர்களி்ன் எண்ணிக்கை கர்நாடகாவில் 35 ஆகவும், இந்தியாவி்ல் 112 ஆகவும் அதிகரித்துள்ளது.பன்றி காய்ச்சல் நோய் இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேவும், பெங்களூரும் அதிக மக்களை பலி
சென்னை: சென்னையில் 11ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை சோலையூர் காமராஜபுரம் மசூதி காலனியில் வசித்து வருபவர் அப்துல்லா. இவரது மகன் முகமது பிலால் (16), கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அவருக்கு கடந்த நான்கு