தூத்துக்குடி கன மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரே நாளில் 73 வீடுகள் இடிந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 51 மிமீ மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் பகுதியில் கனமழைக்கு நேற்று ஓரே நாளில் 64 வீடுகள் பகுதியாகவும், 1 வீடு முழுமையாகவும் சேதம் அடைந்தது. சாத்தான்குளம் பகுதியில் 4 வீடுகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ்காரரை உயரதிகாரி பேப்பர் வெயிட்டால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி காவல் துறையில் உயரதிகாரியாக பணிபுரியும் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன் தூத்துக்குடி டவுனில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டரை பேப்பர் வெயிட்டால் தாக்கினார். மீண்டும் இதேபோல் மற்றொரு இன்ஸ்பெக்டர், இரண்டு போலீஸ்காரர்களையும் சமீபத்தில் பேப்பர் வெயிட்டால் தாக்கியுள்ளார்.
சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 1,700 ஏக்கர் விளை நிலத்தை தரிசு நிலமாகக் காட்ட முயற்சிகள் நடப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உள்பட்ட மேல மீனாட்சிபுரம், கீழ மீனாட்சிபுரம், தெற்கு ஆவாரங்காடு, ராமச்சந்திராபுரம், சுப்பிரமணியாபுரம், லட்சுமிபுரம், மேட்டூர், முப்பிலிப்பட்டி ஆகிய
தூத்துக்குடி: கொத்தடிமைகளைக வேலை செய்வற்காக அழைத்துச் செல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் திருவனந்தபுரத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த சின்னதுரை மகன் இசக்கி. உடன்குடியை சேர்ந்த செல்லப்பா மகன் செல்லத்துரை, பெரியசாமி மகன் சுடலைமுத்து, பெருமாள் மகன் ஆறுமுகம், மற்றும் ஐகோர்ட் இவர்கள் அனைவரும் 7 வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களை
தூத்துக்குடி: பாலியல் புகாரில் சிக்கிய சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவர் இவர் குமரி மாவட்டம் கோட்டாறு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது பயிற்சிக்காக சென்னை சென்று வந்தார்.நாகர்கோவில் வரும்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க
தூத்துக்குடி: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து மும்பையில் தாக்குதல் நடத்தினர். இப்போது அதே பாணியில் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் தாக்குதல் நடத்த
தூத்துக்குடி: சோமாலியா கடற் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இந்திய கப்பலை மீட்க இடைத் தரகர்கள் மூலம் கொள்ளையர்களுடன் கப்பல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மும்பையை சேர்ந்த அல்-காலித் என்ற சரக்கு கப்பல் கடந்த 21ம் தேதி இந்திய மாலுமிகள் உள்பட 24 பேருடன் இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்தபோது சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.கடத்தப்பட்ட 24 பேரில்
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அக்கம்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்டிரல்- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலும், சென்டிரல்- திருச்செந்தூர் இடையே வாரத்திற்கு 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.சென்னை சென்டிரலில் இருந்து புதன்கிழமைகளில்
தூத்துக்குடி: சோமாலிய கடல் கொள்ளையர்கள் பிடியில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழர் சிக்கியுள்ளார். அவரை மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கோரியுள்ளனர்.தூத்துக்குடி தட்டார் தெருவை சேர்ந்த வீரமேகன் மகன் விஜய்கணேஷ். இவர் மும்பையில் உள்ள எஸ்என்பி என்ற கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமான அல்ஹாலிக் என்ற ஆயில் டேங்கர்
தூத்துக்குடி: மாவட்ட எஸ்.பி. நடத்திய பாதுகாப்பு பயிற்சி முகாமுக்கு போதையில் தள்ளாடியபடி வந்த போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி உள்பட 32 மாவட்ட தலைநகரங்களில் 2ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதற்காக பாதுகாப்பு தொடர்பான பயிற்சி முகாம் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை வஉசி கல்லூரியில் எஸ்பி செந்தில்குமார் தலைமையில்