தொலைக்காட்சி ஆரம்பிக்கிறார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் என்பது கேள்விப்பட்ட செய்தி. இந்த தொலைக்காட்சி வருகிற பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பைத் துவங்குவது புதிய செய்தி. இந்தத் தொலைக்காட்சிக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என பெரிய விளம்பரமெல்லாம் கொடுத்திருக்கிறார் விஜய்காந்த்.இந்த தொலைக்காட்சி மட்டுமல்லாமல், புதிய பத்திரிகையும் துவங்குகிறாராம். இது வாரப் பத்திரிகையாக முதலில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாளிதழாக
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இடிந்துள்ளன, மக்கள் உண்ண உணவின்றி கையில் பணமும் இன்றி அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் திண்டாடி வருகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இடிந்துள்ளன. சுமார் 1,400 ஏக்கர் விளைபயிர் சேதமடைந்துள்ளது.
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்கு மட்டும் 'வரும் முன் காப்போம் திட்டத்தை' செயல்படுத்திய அமைச்சர் ராசா, மழை-வெள்ளம் விஷயத்தில் தன்னைத் தேர்ந்தெடுத்த நீலகிரி மக்களுக்கு மட்டும் 'வரும் முன் காப்போம் திட்டத்தை' செயல்படுத்தியிருந்தால் பெரும் சேதத்தை தவிர்த்திருக்க முடியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டில் வட கிழக்கு
சென்னை: கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் நிறுவனங்களும், புரோக்கர்களும் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க வழி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 20ம் தேதி வரை 5,817 பேர் இலவச உயர் சிகிச்சை பெற்றவர்கள் என்றும், இதற்கான செலவு 23 கோடியே 21 லட்சம் ரூபாய் என்றும் பதிவு
சென்னை: ஏழை மக்களுக்கான கலைஞர் இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமலாக்கும் பொறுப்பை தனியார் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு வழங்கி, அவர்களுக்கு ரூ.540 கோடி தரப்பட்டதி்ல் கருணாநிதியின் குடும்பத்துக்கு பங்கு உண்டா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.பாஜக மாநில மீனவர் அணியைச் சேர்ந்த 500 பேர், அந்தக் கட்சியில் இருந்து விலகி
சென்னை: செம்மொழியாம் தமிழ் பற்றி விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்கும் தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் அவரைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் செய்வார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் விவரம்:கேள்வி: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கேலி செய்து ஒரு நடிகர் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?பதில்: செம்மொழியாம் தமிழ் மொழியைப் பற்றி அவர் அறிந்தவற்றின் அடிப்படையில் அறிக்கை
சென்னை: தமிழக எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அழைத்ததன் மூலம் மனிதகுல படுகொலையாளி என்ற குற்றச்சாட்டில் இருந்து தப்ப ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை அதிபர் ராஜபட்ச கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பிக்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.4 மாதங்களில்
சென்னை: கருணாநிதி என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை, பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால், அங்குள்ள தமிழர்களுக்கு சிறிதளவும் நன்மை இல்லை. அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு
சென்னை: என் வருமானத்தில் ஒரு பகுதியை எப்போதுமே ஏழைகளுக்கு வழங்கி வருகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை துறைமுகம் மரைக்காயர் தெருவில் உள்ள ஆஷா மண்டபத்தில் நடைபெற்றது.அதில் விஜய்காந்த் பேசுகையில்எனக்கு சிறுவயது முதலே இஸ்லாமிய நண்பர்கள் அதிகம். இதுபோன்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சிகளில் நான் வருடந்தோறும் கலந்து
சென்னை: தேமுதிக தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த ஆண்டு தன் பிறந்த நாளன்று பிறந்த 330 பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.10,000 டெபாசிட் செய்யும் திட்டத்தை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் துவக்கி வைத்தார்.கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘பெண்கள் நாட்டின் கண்கள்’ என்ற பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் டெபாசிட்