மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கும் வேலையில் முக்கியக் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனவாம்.வாக்காளர்களிடம் சாதனைகளைக் கூறி ஓட்டுக் கேட்டதெல்லாம் அந்தக் காலம். இப்போது கரன்சியைக் காட்டி கேட்பது (கெடுப்பது) தான் புதிய பாணி அரசியலாக மாறியுள்ளது. இந்த புதிய பாணி அரசியல் மகாராஷ்டிராவுக்கும் பரவி விட்டது.அங்கு 288 சீட்கள் கொண்ட சட்டசபைக்கு நாளை தேர்தல்
டெல்லி: உட்கட்சி்ப் பூசலால் துவண்டு போயிருக்கும் கட்சியை தூக்கி நிறுத்தும் வகையிலும், மூன்று மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு கோரிக்கை விடும் வகையிலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூலமாக கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளது பாஜக.வாஜ்பாய் என்றைக்கு தீவிர அரசியலிலிருந்து விலகினாரோ அன்று முதலே பாஜகவுக்கு தேய் பிறையாகி விட்டது. லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியைச்
காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் ஓட்டு போடக் கூடாது என்ற தங்களது கட்டளையை மீறிய 2 வாக்காளர்களின் விரல்களை வெட்டியுள்ளனர் தலிபான் தீவிரவாதிகள்.இருவரும் காந்தஹாரைச் சேர்ந்தவர்கள் ஆவர். வியாழக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். இருப்பினும் கிட்டத்தட்ட 70 சதவீத வாக்கார்கள் தேர்தலில் பங்கேற்று வாக்களித்திருந்தனர்.இந்த நிலையில் காந்தஹாரைச்
சென்னை: இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் அழைப்பை மட்டுமல்லாமல், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைத் தெரிவிக்கும் 49ஓ பிரிவையும் பெரும்பாலான வாக்காளர்கள் புறக்கணித்துள்ளனர்.யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால், அதை சொல்ல 49ஓ என்ற விதி உள்ளது. இதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என அதிமுகவினருக்கு ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்ததால்,
இளையாங்குடி: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே, திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததைப் படம் பிடித்த ஜெயா டிவி குழுவினர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. கேமரா உடைக்கப்பட்டது. மக்கள் திரண்டதால் உடைக்கப்பட்ட கேமரா பாகங்களை எடுத்துக் கொண்டு திமுகவினர் தப்பி விட்டனர்.இளையாங்குடி தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடி என்ற இடத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக
மதுரை: அரசியல்வாதி நாட்டை விற்கிறான். பொது மக்கள் ஓட்டை விற்கின்றனர். இதுக்கு விளக்கம் சொல்ல ஒரு பொதுக் கூட்டம் என்று லட்சிய தி.மு.க. பொது செயலாளர் விஜய டி.ராஜேந்தர் கடுப்புடன் கூறியுள்ளார்.மதுரை, திருமங்கலத்தில் லட்சிய தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் லட்சிய தி.மு.க -வின் பொது செயலாளர் விஜய
சென்னை: இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் வாக்காளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.கம்பம், இளையாங்குடி, தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 18ம் தேதி நடக்கிறது.கடந்த மக்களவை தேர்தலின் போது போலி வாக்காளர்கள் சேர்ப்பை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. வீடு, வீடாக சென்று
மேலூர்: தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.மத்திய உர மற்றும் ரசாயன துறை அமைச்சராகியுள்ள அழகிரி தான் வென்ற மதுரை தொகுதி வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.கிடாரிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, மேலூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர் பேசுகையில், மேலூரில் நீண்ட நாட்களாக நூற்பாலை மூடப்பட்டுள்ளது. அதை
சென்னை: மத்திய சென்னை தொகுதியில், தயாநிதி மாறன் வெற்றி பெற்றதற்காக, தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து வீதி வீதியாக போய் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.மத்திய சென்னை தொகுதியில் 2வது முறையாக வென்று மீண்டும் மத்திய அமைச்சராகியுள்ளார் தயாநிதி மாறன்.இதையடுத்து தொகுதி முழுவதும் சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார் தயாநிதி மாறன். நேற்று ஆயிரம் விளக்கு
நாகர்கோவில்: தமிழகத்திலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாவட்டம் என்ற பெருமையை உடைய கன்னியாகுமரியில் பிற்பகல் 1 மணி வரை 26 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.தமிழகத்திலேயே படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரிதான். கன்னியாகுமரி தொகுதியில் இன்று காலை முதல் மந்தமாகவே வாக்குப் பதிவு நடந்து வருகிறது.பிற்பகல் 1 மணி நிலவரப்படி வெறும் 26 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளனவாம்.